ஆரணி அரசுப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
By DIN | Published on : 22nd November 2017 03:57 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
சோழவரம் ஒன்றியம், ஆரணியில் குறுவள மைய அளவிலான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
ஆரணி தெற்கு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற இக் கண்காட்சியை சோழவரம் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ஆனி பெர்டிசியா பொற்கொடி தொடங்கி வைத்தார்.
இந்த கண்காட்சியில் 10 தொடக்கப் பள்ளிகள், ஒரு நடுநிலைப்பள்ளி ஒரு உயர்நிலை மற்றும் இரண்டு மேனிலைப் பள்ளிகள் என மொத்தம் 14 பள்ளிகள் பங்கேற்றன. ஒவ்வொரு பள்ளிக்கும் இரண்டு அறிவியல் மாதிரிகள் வீதம் கண்காட்சியில் இடம் பெற்றன. கண்காட்சியில் அனைத்துப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.
கண்காட்சி முடிவில் சிறந்த அறிவியல் படைப்புக்கான முதல் பரிசு மல்லியன்குப்பம் தொடக்கப் பள்ளிக்கும், இரண்டாம் பரிசு கீழ்மேனி தொடக்கப் பள்ளிக்கும், மூன்றாம் பரிசு வைரவன்குப்பம் தொடக்கப் பள்ளிக்கும் வழங்கப்பட்டது.