சுடச்சுட

  

  குடிநீர் குழாயில் கலந்து வந்த கழிவு நீர்: பொதுமக்கள் அச்சம்

  By DIN  |   Published on : 22nd November 2017 04:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  kakalur

  காக்களூர் ம.பொ.சி.நகரில் தெருக்குழாயில் கழிவுநீர் கலந்து நுரை பொங்க வரும் தண்ணீர். (வலது) குடிநீரில் கழிவு நீர் கலந்து வந்ததால் தெருவில் தண்ணீரை ஊற்றும் பெண்கள்.

  திருவள்ளூரை அடுத்த காக்களூர் ஊராட்சியில் குடிநீருடன் கழிவு நீர் கலந்து வருவதால் நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். 
  காக்களூர் ஊராட்சியில் உள்ள ம.பொ.சி நகர், விவேகானந்தா நகர், எம்.வி.நகர், சாஸ்திரி நகர் ஆகிய பகுதிகளில் 800 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சிக்கு புங்கத்தூர் கிராமத்தில் இருந்து ஆழ்துளைக் கிணறு அமைத்து, குடிநீர் மேல்நிலைத் தொட்டி மூலம் குடியிருப்புப் பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 
  தற்போதைய நிலையில் கடந்த ஒரு வாரமாக நாள்தோறும் மேல்நிலைத் தொட்டி மூலம் விநியோகிக்கப்படும் குடிநீர் துர்நாற்றத்துடன் வருகிறது. இதனால் குடிநீருக்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 
  ஏற்கெனவே, தொடர் மழை காரணமாக இப்பகுதியில் தொற்று நோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளதால், குடிநீரைக் காய்ச்சி பருக வேண்டும் என மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், குடிநீர் குழாயில் கழிவு நீர் கலந்து வருவதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். 
  இதனால், ரூ.30 விலை கொடுத்து தண்ணீர் கேன்வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் ஏழை, எளிய மக்கள் வசித்து வருவதால் நாள்தோறும் கூடுதல் விலைக்கு குடிநீர் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 
  இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த யுவராணி, வனஜா ஆகியோர் கூறியதாவது: குடிநீரில் கழிவு நீர் கலந்து நுரையுடன் வருவது குறித்து திருவள்ளூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் தெரிவித்தோம்.
  இதுவரையில் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதைத்தொடர்ந்து, கழிவுநீர் கலந்த குடிநீரை ஆய்வுக்காக எடுத்துச் சென்றோம். ஆய்வுக்குப் பின், இந்த நீர் குடிக்க தரமற்றது என சான்றிதழ் கொடுத்த நிலையிலும், அந்த தண்ணீரையே மீண்டும் விநியோகம் செய்து வருகின்றனர்.
  இதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.    

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai