Enable Javscript for better performance
கொப்பூர் இருளர் காலனியில் அதிகாரிகள் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    திருவள்ளூர் மாவட்டம், கொப்பூர் இருளர் காலனியில் வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வு நடத்தினர்.
    திங்கள்கிழமை தினமணியில் 'அடிப்படை வசதியின்றி தவிக்கும் கொப்பூர் கிராம இருளர் சமுதாயத்தினர்' என்ற செய்திக்கட்டுரை வெளியானது. அதில், இப்பகுதியில் கடந்த 50 ஆண்டுகளாக வசித்து வரும் இருளர் சமுதாய மக்கள் அடிப்படை வசதிகள் இன்றியும், அரசின் எவ்வித நலத்திட்ட உதவிகளையும் பெறாமல் இருப்பதோடு, அவர்கள் வசிக்கும் பகுதி சுகாதாரச் சீர்கேட்டுடன் இருப்பதாகவும், இப்பகுதி மக்களுக்கு மாற்று இடத்தில் வீட்டு மனைப் பட்டா உள்ளிட்ட பல கோரிக்கைகள் குறித்தும் தகவல்கள் இடம் பெற்றிருந்தன.
    இந்நிலையில், ஆட்சியர் எ.சுந்தரவல்லி உத்தரவின் படி , வட்டாட்சியர் தமிழ்செல்வன் தலைமையில் அதிகாரிகள் குழுவினர் கொப்பூரில் இருளர் சமுதாய மக்கள் வசிக்கும் பகுதியில் ஆய்வு செய்தனர். 
    அப்போது, இருளர் குடியிருப்பில் அடிப்படை வசதியின்றியும், இவர்கள் அரசின் பல்வேறு உதவிகளைப் பெறாமல் இருப்பதும் கண்டறியப்பட்டது. 
    மேலும் இவர்கள் தாழ்வான பகுதியில் வசித்து வருவதால், மாற்று இடம் கண்டறிந்து, அதனடிப்படையில் 40 குடும்பத்தினருக்குத் தலா 3 சென்ட் வீட்டு மனை தரும் வகையில் நிள அளவைகள் மேற்கொள்ளப்பட்டன. 
    அப்போது, இருளர் சமுதாயத்தினர், விதிமுறைகளுக்கு உள்பட்ட பயனாளிகளுக்கு அரசின் முதியோர் உதவித் தொகை, ஊனமுற்றோர் உதவித் தொகை, மாணவர்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்குமாறும், மத்திய, மாநில அரசின் வீடு கட்டும் திட்டங்களின் படி அரசு ஒதுக்கும் இடங்களில் தொகுப்பு வீடுகளுக்கான ஆணைகளை வழங்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். 
    இதையடுத்து, ஒரு வாரத்திற்குள் கொப்பூர் இருளர் சமுதாய மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். 



     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai