சுடச்சுட

  

  திருவள்ளூர் மாவட்டம் அரண்வாயலில், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு திங்கள்கிழமை நடைபெற்றது. 
  தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் திருவள்ளூர் மாவட்ட அளவில் 25 ஆவது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு, அரண்வாயல் பகுதியில் உள்ள பிரதியுஷா பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் அ. கலைநேசன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சாந்தகுமாரி ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட நிர்வாகிகள் வேலாயுதம், பாஸ்கரன், சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
  இம்மாநாட்டை முன்னிட்டு அறிவியல் ஆய்வு மேற்கொள்ளும் மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில் 800 ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டது. அவர்களில் 70 ஆசிரியர்கள் தங்கள் பள்ளி மாணவர்களை ஆய்வில் ஈடுபடுத்தினர். இதில், 350 மாணவர்கள் 70 குழுக்களாகப் பிரிந்து, தங்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த தலைப்புகளில் ஆய்வை மேற்கொண்டனர். 
  தேர்வான மாணவர்களின் ஆய்வுகள் இம்மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டன. அதில், சிறந்த 8 ஆய்வுகள் பரிசுக்குரியதாகத் தேர்வு செய்யப்பட்டன. பின்னர் சிறந்த குழுக்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. 
  மாணவர்களின் ஆய்வு மனப்பான்மை மற்றும் அறிவியல் விழிப்புணர்வை மேம்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் பிரதியுஷா கல்லூரி தலைவர் பி. ராஜாராவ், கல்லூரி முதல்வர் க.ச. ரமேஷ், மூத்த விஞ்ஞானி எ.ந. ஐயப்பன், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் எ. மோ. லோகமணி, விஞ்ஞானி ராஜேந்திரன், விஸ்வநாதன், ஜெகதீசன், மாவட்ட ஒருங்கினைப்பாளர் தாளமுத்து நடராஜன், மாவட்ட கல்வி ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai