சுடச்சுட

    

    சென்னை அருகே போலீஸாரின் விசாரணைக்குப் பயந்து சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: 
    ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் சின்னா. இவரது மனைவி ஜெயசீலி. இவர்கள் இருவரும் சென்னையை அடுத்துள்ள திருவேற்காடு அபிராமி நகரில் தங்கி துப்புரவுத் தொழில்புரிந்து வருகின்றனர். இவர்களின் மூன்றாவது மகன் டேவிட் (15) , மோட்டார் சைக்கிள் திருட்டு தொடர்பாக திருவேற்காடு போலீஸாரால் கடந்த ஞாயிற்றுக்கிழமை 
    அழைத்துச் செல்லப்பட்டார். அவரிடம் திங்கள்கிழமையும் போலீஸார் விசாரணை நடத்தினராம். செவ்வாய்க்கிழமையும் காவல் நிலையத்தில் ஆஜராக போலீஸார் அறிவுறுத்தினராம்.
    அதன்படி, டேவிட்டை அவரது பெற்றோர் விசாரணைக்காக காவல் நிலையத்துக்குச் செல்லுமாறு செவ்வாய்க்கிழமை காலை கூறினார்களாம். இந்நிலையில் வீட்டில் தனது அறைக்குச் சென்ற டேவிட் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டாராம்.
    தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று டேவிட் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
    பெற்றோர் குற்றச்சாட்டு: இதனிடையே, விசாரணையின்போது போலீஸார் துன்புறுத்தியதாலேயே டேவிட் பயந்து தற்கொலை செய்துக் கொண்டதாக அவரது குடும்பத்தினரும், உறவினரும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai