சுடச்சுட

  

  விளைநிலங்களில் வீசப்படும் பிளாஸ்டிக் கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு

  By DIN  |   Published on : 22nd November 2017 03:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவள்ளூர் பகுதிகளில் விளைநிலங்களிலும், ஏரிப்பகுதிகளிலும் வீசப்படும் பிளாஸ்டிக் கழிவுகளால் சுற்றுச்
  சூழலுக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலையும், நிலத்தடி நீர் ஆதாரம் பாதிக்கும் நிலையும் உள்ளதாக விவசாயிகளும், சமூக ஆர்வலர்களும் புகார் தெரிவித்து வருகின்றனர். 
  தமிழகத்தில் நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள மதுக் கடைகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. 
  இதையடுத்து, கடந்த சில மாதங்களாக பெரும்பாலான மதுக் கடைகள் அடைக்கப்பட்டன. ஒரு சில இடங்களில் தற்போதும் சாலையோரங்களில் மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் குடியிருப்புகளுக்கு மத்தியில் மதுக்கடைகளைத் திறக்க பொது மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 
  இதையடுத்து, விளை நிலங்களிலும், கால்வாய் கரை ஓரங்களிலும் மதுக்கடைகள் திறக்கப்பட்டு வருகின்றன. அத்துடன், ஏரிகள் மற்றும் விளைநிலங்கள் ஆகியவை திறந்தவெளி மதுக் கூடமாகவும் செயல்படும் நிலை உள்ளது. 
  இந்நிலையில் திருவள்ளூர் நகர் பகுதியில் இருந்த மதுக் கடைகள் அடைக்கப்பட்டன. அதையடுத்து , நகர் மற்றும் கிராமங்களை ஒட்டிய விளை நிலங்களில் மதுக்கடைகள் அமைத்து செயல்பட்டு வருகின்றன. 
  இதேபோல் திருவள்ளூர் பகுதியில் டோல்கேட் , அயப்பாக்கம், தொட்டிக்கலை , காக்களூர், கடம்பத்தூர் ஸ்ரீதேவிகுப்பம், ஈக்காடு, பேரம்பாக்கம் உள்பட பல்வேறு பகுதிகளில் விளைநிலங்களுக்கு அருகில் மதுக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு மதுவை வாங்குவோர், விளைநிலங்களில் கூட்டமாக அமர்ந்து மது அருந்துகின்றனர். 
  பின்னர் குப்பைக் கழிவுகளை அந்த இடங்களிலேயே வீசிவிட்டுச் சென்று விடுகின்றனர். 
  இதனால் பிளாஸ்டிக் பொருள்கள் அனைத்தும் காற்றில் அடித்துச் செல்லப்பட்டு விளைநிலங்களில் பரவுகிறது. 
  இதேபோல், பாதுகாக்கப்பட்ட புதுச்சத்திரம் ஜமீன்கொரட்டூர் அணைக்கட்டு, பூண்டி ஏரி உள்பட பல்வேறு பகுதிகளில் மது அருந்துவோரால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. அதேபோல் மது பாட்டில்களையும் உடைத்து சாலையில் வீசிவிட்டுச் செல்கின்றனர்.
  இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர். 
  இது தொடர்பாக தண்ணீர்குளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாய ஆர்வலர் சந்திரசேகரன் கூறியதாவது: மதுக்கடையுடன் இணைந்த பார்களில் கூடுதல் விலைக்கு துணைப் பொருள்கள் விற்கப்படுகிறது. இதைத் தவிர்க்கும் வகையில் மதுப்பிரியர்கள் வெளியே துணைப் பொருள்களை வாங்கி வந்து விளைநிலப் பகுதிகளில் அமர்ந்து, காற்றோட்டமாக மது அருந்துகின்றனர். இதேபோல், ஏரிகள் உள்ள பகுதியிலும் அப்படியே பாட்டில்களையும், பிளாஸ்டிக் குவளைகள் , தண்ணீர் பாக்கெட் போன்ற கழிவுகளை விளைநிலங்களில் போட்டு விட்டுச் செல்கின்றனர். 
  இதனால் , சுற்றுச் சூழல் பாதிப்பு ஏற்படுவதுடன், நிலத்தடி நீர் ஆதாரமும் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் , அரசு சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai