Enable Javscript for better performance
வீட்டுவரி குறைக்கக் கோரி மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    வீட்டுவரி குறைக்கக் கோரி மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்

    By DIN  |   Published on : 22nd November 2017 03:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சென்னையை அடுத்த அம்பத்தூர் மண்டலத்தில் வீடுகளுக்கான சொத்துவரி, சென்னை நகரைவிட கூடுதலாக வசூலிக்கப்படுவதால், இதனை குறைக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
    சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    இதில், சொத்து வரியைக் குறைக்கக்கோரியும், சுகாதார மைய ங்களில் செவிலியர்கள் நியமிக்கக் கோரியும், மருந்தகங்களில் முழுமையான மருந்துகளை கையிருப்பு வைத்திருக்கக் கோரியும், மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கக் கோரியும், அம்பத்தூர், கொரட்டூர் ஏரிகளில் கலக்கும் கழிவு நீரைத் தடுத்து நிறுத்தக் கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
    ஆர்ப்பாட்டத்திற்கு பகுதிச் செயலாளர் பால்சாமி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுந்தர்ராஜ் முன்னிலை வகித்தார். 
    பகுதி நிர்வாகிகள் பாக்கியம், சாந்தி, தீபா, கோபி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் கோரிக்கை மனுவை மண்டல அதிகாரி பாலசுப்ரமணியிடம் அளித்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai