சுடச்சுட

  

  சோழவரம் நல்லூர் பகுதியில் உள்ள சுங்கச்சாவடி அருகே, வெளி மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 200 மூட்டை குட்கா புகையிலைப் பொருள்களை போலீஸார் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர். 
  சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் நல்லூர் பகுதியில் சுங்கச்சாவடி அமைந்துள்ளது. சுங்கச்சாவடி அருகே சிறுணியம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே நீண்ட தூரம் செல்லும் கனரக வாகனங்கள் நிறுத்துமிடம் அமைந்துள்ளது. அங்கு கனரக வாகன ஓட்டுநர்கள், சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டுச் செல்வது வழக்கம்.
  இந்நிலையில் கனரக வாகனங்கள் நிறுத்தும் இடத்தில், லாரியில் இருந்து குட்கா மூட்டைகள் மினி வேனுக்கு மாற்றப்பட்டு வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. 
  இதையடுத்து சோழவரம் போலீஸார் அங்கு வந்தனர். போலீஸாரை பார்த்தவுடன் குட்கா மூட்டைகளை ஏற்றிக்கொண்டு இருந்த நபர்கள் தப்பி ஓடினர். 
  இதையடுத்து வடமாநில பதிவு எண் கொண்ட லாரி மற்றும் இரண்டு மினி வேன்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். அத்துடன் மினி வேன்களில் ஏற்றப்பட்டிருந்த 200 மூட்டை குட்கா புகையிலை பொருள்களை பறிமுதல் செய்தனர். தப்பியோடிய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai