Enable Javscript for better performance
ஆசிரியர் பணியிடங்களை நிரப்பக் கோரி மாணவிகள் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    ஆசிரியர் பணியிடங்களை நிரப்பக் கோரி மாணவிகள் போராட்டம்

    By DIN  |   Published on : 23rd November 2017 03:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருத்தணி அருகே பள்ளிப்பட்டில் தரம் உயர்த்தப்பட்ட அரசுப் பள்ளியில் ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி புதன்கிழமை மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    பள்ளிப்பட்டு அரசினர் மகளிர் உயர்நிலைப்பள்ளி 2016-17 கல்வி ஆண்டில் மேல் நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. அதைத்தொடர்ந்து 11 ஆம் வகுப்பில் 4 பிரிவுகளில் 59 மாணவியர் சேர்க்கப்பட்டு படித்து வந்தனர். 
    இப்பள்ளியில் 11 ஆசிரியர்கள் இருக்க வேண்டிய இடத்தில் 3 ஆசிரியர்கள் மட்டுமே வேலை செய்து வருவதாகக் கூறப்படுகிறது. நடப்பாண்டில் 11 ஆம் வகுப்பு மாணவர்களும் அரசு பொதுத்தேர்வு எழுத மூன்று மாதங்கள் மட்டுமே கால அவகாசம் இருப்பதால், மாணவியர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந் நிலையில் புதன்கிழமை 11-ஆம் வகுப்பு படித்து வரும் 50 மாணவியர் தேர்வுகளைப் புறக்கணித்து பள்ளிக்கு முன் அமர்ந்து ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். 
    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் மாணவியரை சமாதானப்படுத்தினர். இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலர் குமாரசாமி கூறும்போது, இப்பள்ளிக்கு ஏற்கெனவே வேறு பள்ளிகளிலிருந்து ஆசிரியர்கள் மாற்றுப்பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால், தற்போது இரண்டாம் இடைப் பருவத் தேர்வுகள் நடப்பதால் ஆசிரியர்கள் சரியாக வருவதில்லை என விசாரணையில் தெரிய வந்துள்ளது. உடனடியாக பள்ளிக்கு வராத ஆசிரியர்கள் இன்று முதல் (வியாழக்கிழமை) பணிக்கு வருவதற்குத் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai