சுடச்சுட

    

    பொன்னேரியில் உள்ள மீன் வளக் கல்லூரியில் உலக மீன்வள தின விழா மற்றும் 50-ஆவது நூலக வார விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. 
    விழாவுக்கு கல்லூரி முதல்வர் (பொறுப்பு) மணிகண்டவேலு தலைமை வகித்தார். இதில், பொன்னேரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள அரசு, தனியார் பள்ளி மாணவர்களுக்கான பேச்சு, ஓவியம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
    தமிழாலயா இலக்கிய அமைப்பின் நிர்வாகி தாமோதரன், அரசுக் கல்லூரிப் பேராசிரியை குளோரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பொன்னேரி முழுநேர கிளை நூலகர் சம்பத் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai