சுடச்சுட

  

  காஞ்சிபுரம், திருவள்ளூர்: சர்க்கரை விலை உயர்வைக் கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்

  By DIN  |   Published on : 23rd November 2017 03:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  vandaloor

  சர்க்கரை விலை உயர்வைக் கண்டித்து, காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்திலுள்ள 883 ரேஷன் கடைகள் முன்பு திமுகவினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
  காஞ்சிபுரம் பல்லவன் நகர் ரேஷன் கடை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் தலைமை வகித்தார். வாலாஜாபாத் புவனேஸ்வரி நகர் ரேஷன் கடை முன்பு மாவட்டச் செயலாளர் க.சுந்தர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஒன்றியச் செயலாளர் சேகர், நகரச் செயலாளர் பாண்டியன், காங்கிரஸ் கட்சி மேற்கு மாவட்டத் தலைவர்ஜி.வி.மதியழகன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்திலுள்ள 883 ரேஷன் கடைகளுக்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், நவம்பர் 1- ஆம் தேதி முதல் சர்க்கரை விலை (1கி) ரூ. 13.50-லிருந்து, ரூ. 25 ஆக உயர்த்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தமிழகத்தில் உள்ள ஏழை, எளிய நடுத்தர மக்களுக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசுடன் சேர்ந்து, மாநில அரசு தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த திட்டம் கொண்டுள்ளது. இதனால், அரிசி மானியம் ரத்து, சர்க்கரை மானியம் ரத்து, ஆதார் அட்டை இணைப்பு, ரேஷன் அட்டைகள் கொடுப்பதில் கடும் நிபந்தனைகள் என ஒட்டுமொத்த பொது விநியோகத் திட்டத்தையே சிதைத்துள்ளது. ரேஷன் கடைகளில் வழங்கப்படும் சர்க்கரையின் விலையை இருமடங்காக உயர்த்தி அறிவித்துள்ளது. இது ஏழை - எளிய மக்களை வஞ்சிக்கும் செயலாக உள்ளது எனக் கூறி கோஷமிட்டனர்.
  இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான திமுகவினர் கலந்துகொண்டனர். 
  மதுராந்தகத்தில்...
  மதுராந்தகம் தேரடி வீதி, ரேஷன் கடை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, மதுராந்தகம் தொகுதி எம்எல்ஏ நெல்லிகுப்பம் புகழேந்தி தலைமை வகித்தார். மதுராந்தகம் திமுக செயலர் கே.குமார் முன்னிலை வகித்தார். மதுராந்தகம் நகர்மன்ற முன்னாள் தலைவர் மலர்விழிகுமார் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். செய்யூர் தொகுதிக்கு உள்பட்ட, செய்யூர் ரேஷன் கடை முன்பு செய்யூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் மருத்துவர் ஆர்.டி.
  அரசு தலைமை வகித்தார். லத்தூர் ஒன்றிய திமுக செயலர் கே.எஸ். ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் ஏராளமான திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
  ஸ்ரீபெரும்புதூரில்...
  ஸ்ரீபெரும்புதூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில், ஒன்றியத்துக்குள்பட்ட ரேஷன் கடைகளின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
  குன்னம் ஊராட்சியில் உள்ள ரேஷன் கடை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, ஸ்ரீபெரும்புதூர் கிழக்கு ஒன்றியச் செயலாளர் ந.கோபால் தலைமை வகித்தார். இதில் மாவட்ட அணிகளின் துணைஅமைப்பாளர் கு.ப.முருகன் உள்ளிட்ட திமுகவினர் கலந்து கொண்டனர்.
  மேவளூர்குப்பம் ரேஷன் கடை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, ஒன்றிய இளைஞர் அணிஅமைப்பாளர் குன்னம் ராமமூர்த்தி தலைமை வகித்தார். ஒன்றிய ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் மண்ணூர் சரவணன் முன்னிலை வகித்தார்.
  குன்றத்தூர் ஒன்றியம், செரப்பனஞ்சேரி ரேஷன் கடை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, ஊராட்சி செயலர் பார்த்தசாரதி தலைமை வகித்தார். முன்னாள் தலைவர் சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தார். இதில் வார்டு செயலர்கள் சீனிவாசன், மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 
  செங்கல்பட்டில்... 
  மாமல்லபுரத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு, நகரச் செயலாளரும், மாவட்ட துணைச் செயலாளருமான விஸ்வநாதன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் ரமேஷ், மனோகரன், ஆனந்தன், பிரேம் ஆனந்த், பிரபாகரன் உள்ளிட்டோர் மாமல்லபுரம் நகரத்தில் உள்ள ரேஷன் கடைகள் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வண்டலூரில் முன்னாள் ஊராட்சித் தலைவர் ஆராமுதன் தலைமையில், மகளிர் அணியினர், இளைஞர் அணியினர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். 
  செங்கல்பட்டில் உள்ள 33 வார்டுகளில் உள்ள ரேஷன் கடைகளின் முன்பு திமுகவினர் எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் தலைமையில், நகரச் செயலாளர் நரேந்திரன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் அன்புச்செல்வன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
  திருவள்ளூரில்...
   திருவள்ளூர் மாவட்டத்தில், கூட்டுறவு நியாய விலைக்கடைகளில் சர்க்கரை விலை உயர்வு மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்காததைக் கண்டித்து திருவள்ளூரில் திமுக வினர் உள்பட பல்வேறு கட்சியினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
  இந்த ஆர்ப்பாட்டங்கள் திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் உள்ள 243 நியாய விலைக்கடைகள் முன்பு அந்தந்த பகுதிகளில் உள்ள கட்சி நிர்வாகிகள் தலைமையில் நடைபெற்றன. 
  காந்திபுரம் நியாய விலைக்கடை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் தலைமை வகித்தார். இதேபோல், ஜே.என்.சாலையில் உள்ள நியாய விலைக்கடை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் காயல் அகமது சாலிக், காங்கிரஸ் சார்பில் மதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
  மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில், நகரச் செயலாளர் ரவிச்சந்திரன், இளைஞரணி நகர துணைஅமைப்பாளர் ஜெய்கிருஷ்ணா, முன்னாள் நகராட்சித் தலைவர் பொன்.பாண்டியன், நிர்வாகிகள் கா.மு. தயாநிதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
  கும்மிடிப்பூண்டியில்...
  கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் 28 ரேஷன் கடைகள் முன்பும், மேற்கு ஒன்றிய திமுக சார்பில் 33 ரேஷன் கடைகள் முன்பும், நகர திமுக சார்பில் 2 கடைகள் முன்பும், ஊத்துக்கோட்டை வட்டத்தில் 55 ரேஷன் கடைகள் முன்பும் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். 
  ரேஷன் பொருள்கள் விலையேற்றத்தை கண்டித்தும், சர்க்கரை முறையாக வழங்கப்படாததையும், உளுந்தம் பருப்பு நிறுத்தப்பட்டதற்கும், துவரம் பருப்பிற்குப் பதில் அதே விலையில் மைசூர் பருப்பு வழங்கப்படுவதற்கும் கண்டனம் தெரிவித்து தமிழகமெங்கும் திமுக அறிவித்த ஆர்ப்பாட்டத்தை ஒட்டி கும்மிடிப்பூண்டியில் அனைத்து ஊராட்சிகளிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் புதன்கிழமை நடைபெற்றன.
  கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றியத்தில்: 28 ரேஷன் கடைகளில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியச் செயலாளரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமை வகித்தார். நிகழ்வில் மாவட்ட பிரதிநிதி கி.வே.ஆனந்த குமார் முன்னிலை வகித்தார்.
  கவரப்பேட்டையில் ஒன்றிய துணைச் செயலாளர் டி.இ.திருமலை தலைமையிலும், மெதிப்பாளையத்தில் மாவட்ட பிரதிநிதி ராமஜெயம் தலைமையிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றியத்தில்: 33 ரேஷன் கடைகள் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் மு.மணிபாலன் தலைமை வகித்தார். ஆரம்பாக்கத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றினார். ஊராட்சி செயலாளர் மனோகரன் முன்னிலை வகித்தார்.
  நேமள்ளூர் ஊராட்சியில், மாவட்ட இலக்கிய அணி நிர்வாகி மனோகரன், முன்னாள் ஒன்றியப் பொருளாளர் வெங்கடாசலபதி, திருப்பதி, காமராஜ், வின்சென்ட் முன்னிலை வகித்தனர். 
  மாநெல்லூரில், பொதுக்குழு உறுப்பினர் பா.செ.குணசேகரன், ஒன்றிய துணை செயலாளர் ஏசுரத்தினம், எம்.ஜி.பாபு, அபுபக்கர், புருஷோத்தமன் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது அப்பகுதி முதியோர்கள் வந்து தங்களுக்கு 70 வயதைக் கடந்தும் முதியோர் உதவித் தொகை வழங்கப்படாதது குறித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என வலியுறுத்தினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 
  கும்மிடிப்பூண்டியில், நகரச் செயலாளர் அறிவழகன், தோக்கமூரில் மாவட்ட விவசாய அணி நிர்வாகி மணி, பாதிரிவேட்டில் ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் சந்திரமோகன், நெசவாளர் அணி மாவட்ட நிர்வாகி சுப்பிரமணி, அன்பு, காங்கிரஸ் வட்டார துணைத் தலைவர் போட்டோ செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
  ஊத்துக்கோட்டை வட்டத்தில்: எல்லாபுரம் ஒன்றியம் ஊத்துக்கோட்டை வட்டத்தில் 55 ரேஷன் கடைகள் முன்பு திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
  எல்லாபுரம் வடக்கு ஒன்றியத்தில் ஒன்றியச் செயலாளர் ஜெ.மூர்த்தி தலைமையில் பெரிய பாளையம் ரேஷன் கடை முன்பும், எல்லாபுரம் தெற்கு ஒன்றியத்தில் கன்னிகைப்பேரில் ஒன்றியச் செயலாளர் சக்திவேல் தலைமையிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
  தண்டலம் பகுதியில், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் தண்டலம் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலும், ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் நகரச் செயலாளர் அப்துல் ரஷீத் தலைமையிலும், ஆரணி பேரூராட்சியில் நகரச் செயலாளர் ஜி.பி.வெங்கடேசன் தலைமையிலும், கொடுவெளியில் எல்லாபுரம் தெற்கு ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் கொடுவெளி குமார் தலைமையிலும் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai