சுடச்சுட

  
  arjunan

  திருத்தணி அருகே ரூ.10 லட்சம் மதிப்பிலான நிலத்தை ஆள்மாறாட்டம் செய்து மோசடி செய்த நபரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். 
  திருத்தணி பெரியார் நகரைச் சேர்ந்தவர் பூசாரி கோவிந்தசாமி. இவரது மகன் ஞானசேகரன்(40). கோவிந்தசாமிக்கு மதுரா சீனிவாசபுரம் கிராமத்தில் பூர்வீக சொத்து 18 சென்ட் நிலம் உள்ளது. 
  இந்த நிலத்தை அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகசாமியின் மகன் அர்ஜூனன் ஆள்மாறாட்டம் செய்து பத்திரப் பதிவு செய்து அனுபவித்து வந்தாராம்.
  இந்த நிலத்தை பார்வையிடுதவதற்காக ஞானசேகரன் கடந்த 2 நாள்களுக்கு முன்பு பூர்வீக கிராமத்திற்குச் சென்றுள்ளார். அப்போது, அந்த நிலத்தை அர்ஜூனன் ஆள்மாறாட்டம் செய்து அனுபவித்து வந்தது தெரியவந்தது. 
  இதுகுறித்து ஞானசேகரன் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தியிடம் புகார் செய்தார். இதையடுத்து, நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு துணைக் கண்காணிப்பாளர் ஞானவேலு, சார்பு ஆய்வாளர் லியோபிரான் உள்ளிட்டோர் மேற்கொண்ட விசாரணையில் அர்ஜூனன் நிலமோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அர்ஜூனனை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai