சுடச்சுட

  

  திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடி வலைகள் மற்றும் கண்ணாடி நாரிழைகளால் ஆன பரிசல்களை 50 சதவீத மானியத்தில் வாங்குவதற்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்துள்ளார். 
  இதுகுறித்து, ஆட்சியர் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மீனவர்கள் பயனடையும் வகையில் அரசு பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தற்போதைய நிலையில் மீனவர்களின் மீன் பிடித் திறனை மேம்படுத்தும் நோக்கத்தில் நிகழாண்டில் மீன்பிடி வலைகள் மற்றும் கண்ணாடி நாரிழைகளால் ஆன பரிசல்கள் வாங்க 50 சதவீத மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற மீன்வளத்துறை வழியாக மீனவர்கள் விண்ணப்பிக்கலாம். 
  மீனவர்களிடம் பெறப்படும் விண்ணப்பங்களில் முன்னுரிமை மற்றும் தகுதி அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர். இதற்கான விண்ணப்பங்களை மீன்துறை உதவி இயக்குநர், எண்.11, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, பொன்னேரி, திருவள்ளுர் மாவட்டம்- 601 204 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமோ அனுப்பி வைக்கலாம். மேலும், விவரங்களுக்கு 044-27972457 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார். 
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai