Enable Javscript for better performance
அதிமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்- Dinamani

சுடச்சுட

    
    admk

    இரட்டை இலை சின்னம் இபிஎஸ், ஓபிஎஸ் அணிக்குக் கிடைத்தமைக்காக பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கிய திருத்தணி அதிமுக ஒன்றியச் செயலாளர் இ.என்.கண்டிகை எ.ரவி.

    திருத்தணியில், இரட்டை இலை சின்னத்தை இபிஎஸ், ஓபிஎஸ் அணிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியதைத் தொடர்ந்து ஒன்றிய அதிமுகவினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். 
    மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்குப் பிறகு அதிமுக வில் ஏற்பட்ட பிளவால், அக்கட்சியின் சின்னமான இரட்டை இலையை தேர்தல் ஆணையம் முடக்கியது. இதை மீண்டும் யாருக்கு வழங்குவது என்பது தொடர்பாக தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது. 
    இந்நிலையில், வியாழக்கிழமை இபிஎஸ், ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை சின்னத்தை வழங்கி இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
    இதனால் அதிமுகவினர் மகிழ்ச்சி அடைந்தனர். எம்ஜிஆரின் சின்னம் மீண்டும் கிடைத்ததைக் கொண்டாடும் வகையில் திருத்தணி ஒன்றிய அதிமுக சார்பில் அரக்கோணம் எம். பி. திருத்தணி கோ. அரி, ஒன்றியச் செயலாளர் இ.என்.கண்டிகை எ. ரவி ஆகியோர் முன்னிலையில், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்து கொண்டாடி மகிழ்ந்தனர். 
    இந்நிகழ்வில் தாலுக்கா கூட்டுறவு வங்கி தலைவர் ஜெயசேகர்பாபு, நகர துணை செயலாளர் கேபிள் சுரேஷ், எச்.டி வங்கி தலைவர் டி.எம்.சீனிவாசன், ஏ.எஸ். பாலாஜி, ஒன்றியப் பொருளாளர் கோ.தாமோதரன், வேலஞ்சேரி பழனி, கொண்டாபுரம் பிச்சாண்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai