Enable Javscript for better performance
அரசுப் பள்ளியில் புதிய கலையரங்கம் அமைக்க எம்.பி. நிதி ஒதுக்கீடு- Dinamani

சுடச்சுட

    

    அரசுப் பள்ளியில் புதிய கலையரங்கம் அமைக்க எம்.பி. நிதி ஒதுக்கீடு

    By DIN  |   Published on : 24th November 2017 03:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    hari

    அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் புதிய கலையரங்கம் அமைக்க, அரக்கோணம் எம்.பி. திருத்தணி கோ.அரியிடம் கோரிக்கை மனு வழங்கிய தலைமை ஆசிரியை டி.தெமினா கிரேனாப்.

    அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் புதியதாக கலையரங்கம் கட்டவும், விளையாட்டு மைதானம் சீரமைக்கவும் அரக்கோணம் எம்.பி. திருத்தணி கோ.அரி ரூ. 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். 
    திருத்தணி அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில், 1700 க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளி வளாகத்தில் கலையரங்கம் இல்லாததால், பள்ளியில் நடக்கும் விழாக்களின் போது, தனிநபர் மூலம் பந்தல் வாடகைக்கு எடுத்து விழாக்கள் நடத்தி வந்தனர். இந்நிலையில், சனிக்கிழமை கடந்த ஆண்டு பிளஸ் 2 முடித்த மாணவிகளுக்கு பகல் 2 மணிக்கு இலவச மடிக்கணினி வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக அரக்கோணம் எம். பி. கோ.அரி மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கி சிறப்புரையாற்றினார். 
    அப்போது பள்ளிக்கு புதிதாக கலையரங்கம், விளையாட்டு மைதானத்தை சீரமைத்து தருமாறு பள்ளி தலைமை ஆசிரியை டி.தெமினா கிரேனாப்,பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சுரேஷ் ஆகியோர் கோரிக்கை மனு கொடுத்தனர். தொடர்ந்து, எம்.பி. திருத்தணி கோ.அரி தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கலையரங்கம், விளையாட்டு மைதான சீரமைப்புக்கு ரூ.10 லட்சம் ரூபாய் நிதி ஓதுக்கீடு செய்தார். இப்பணிகளுக்கு விரைவில் டெண்டர் விடப்பட்டு புதியதாக கலையரங்கம் அமைக்கவும், விளையாட்டு மைதானத்தை சீரமைக்கப்பட உள்ளதாகவும் பள்ளி நிர்வாகம் சார்பில் தெரிவித்தனர்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai