சுடச்சுட

  

  ஊராட்சி செயலாளர்கள் உள்ளிருப்புப் போராட்டம்: பணிகள் முடங்கின

  By DIN  |   Published on : 24th November 2017 03:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  gumutipoondi

  கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள்.

  கும்மிடிப்பூண்டியை அடுத்த பெரியபாளையத்தில் ஊதியம் தொடர்பான கோரிக்கையை வலியுறுத்தி ஊராட்சி செயலாளர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
  கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியம் மற்றும் எல்லாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் பணியாற்றும் ஊராட்சி செயலாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலக ஊழியர்கள் ஆகியோர் வியாழக்கிழமை நடத்திய உள்ளிருப்பு போராட்டத்தின்போது, இளநிலை உதவியாளர்களுக்கு இணையான காலமுறை ஊதியத்தை ஊராட்சி செயலாளர்களுக்கு கருவூலம் மூலம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் 58 ஊராட்சி செயலாளர்களும், 50 ஊழியர்களும் ஆர்ப்பாட்டம் செய்தனர். 
  பெரியபாளையத்தில் எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 53 ஊராட்சி செயலாளர்களும், 40 ஊழியர்களும் பங்கேற்றனர். 
  திருவள்ளூரில்...
  இப்போராட்ட த்தினால், ஒப்பந்ததாரர்களுக்கு பணம் விடுவித்தல், பயனாளிகளுக்கு சுகாதார வளாகம் அமைப்பதற்கான உத்தரவு, பசுமை குடியிருப்புத் திட்டம், பிரதமர் குடியிருப்புத் திட்டத்தில் வீடுகள் அமைப்பதற்கான பணி ஆணை வழங்குதல், தேசிய ஊரக வேலை திட்ட தொழிலாளர்களுக்கு கூலி விடுவித்தல், திருமண நிதி உதவிக்கான விண்ணப்பம் அளித்தல் உள்பட பல்வேறு திட்டப்பணிகள் முடங்கின. அலுவலகங்களும் வெறிச்சோடி காணப்பட்டன. 
  இதுகுறித்து தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பின் பொறுப்பாளர் மில்கி ராஜாசிங் கூறுகையில், தமிழகம் முழுவதும் 12,254 ஊராட்சிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் கிராம ஊராட்சிகளில் வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்துவதில் ஊராட்சி செயலர்கள் பெரும் பங்காற்றி வருகின்றனர். கிராமிய திட்டங்கள், அடிப்படை வசதிகள் செய்து தருதல், வரிவசூல் போன்ற பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 
  அதனால் ஊராட்சியில் பணிபுரிந்து வரும் செயலாளர்களுக்கு, இளநிலை உதவியாளர்களுக்கு இணையான ஊதியம் கருவூலம் மூலம் வழங்க வேண்டும். இக்கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் தமிழக முதல்வரை வரும் டிச.12-இல் நேரில் சந்தித்து பணியாளர்கள் அனைவரும் பெருந்திரளாக முறையிடுவோம். இதற்கும் நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் அடுத்த கட்டமாக டிசம்பர் 22-இல் சென்னையில் உள்ள பனகல் மாளிகையை முற்றுகையிடுவோம். 
  அதற்கும் செவிசாய்க்கவில்லை என்றால் ஜனவரி மாதம் முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் அவர் தெரிவித்தார். 

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai