சுடச்சுட

    

    தேசிய நூலக வாரவிழா: வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசு

    By DIN  |   Published on : 24th November 2017 03:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேசிய நூலக வாரவிழாவை முன்னிட்டு, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள்வழங்கப்பட்டன. 
    திருவள்ளூர் மாவட்ட மைய நூலக வளாகத்தில் 50-ஆவது தேசிய நூலக வார விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இவ்விழாவை ஆட்சியர் எ.சுந்தரவல்லி தொடங்கி வைத்தார். மாவட்ட நூலக அலுவலர் (கூடுதல்-பொறுப்பு) க.ஆனந்தன் வரவேற்றார். 
    நூலக வார விழா என்பது பொதுமக்களிடத்தில் நூலகத்தின் தேவையை எடுத்துச் சொல்வதற்கும், மாணவர்களுக்கு நூலகம் ஓர் அறிவுக் களஞ்சியம் என்பதை உணர்த்தவும், அறிவுத்திறனை மேம்படுத்தவும் நடத்தப்படுகிறது. நூலகத்தில், அனைவரையும் உறுப்பினராகவும், புரவலராகவும் தங்களை இணைத்துக் கொள்வதற்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்த இத்தேசிய நூலக வார விழா கொண்டாடப்படுகிறது. இவ்விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை, பேச்சு, ஓவியம் மற்றும் கதை சொல்லுதல் ஆகிய பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் தேர்வு செய்யப்பட்ட 96 மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளும் வழங்கப்பட்டன. 
    இவ்விழாவில் திருவள்ளூர் மைய நூலக வாசகர் வட்டத் தலைவர் ரவிச்சந்திரன், தமிழ் பண்பாட்டுச் சங்க பொதுச்செயலாளர் (சித்த மருத்துவர்) தமிழன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராஜேந்திரன், திருவள்ளூர் மாவட்ட மைய நூலகர் எ.சச்சிதானந்த யோகீஸ்வரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai