தொண்டு நிறுவனத்தைப் பார்வையிட்ட மாதவரம் எம்எல்ஏ
By DIN | Published on : 24th November 2017 03:38 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றத்தை அடுத்த சிறுணியம் பகுதியில் உள்ள தனியார் தொண்டு நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்ட மாதவரம் எம்எல்ஏ எஸ்.சுதர்சனம் உடல் நலம் குன்றியவர்களுக்கு உரிய உதவிகள் செய்வதாக உறுதி அளித்தார்.
சிறுணியம் பகுதியில் அபயம் தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்நிறுவனம், தீராத வலி மற்றும் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மேல் சிகிச்சை செய்ய வசதியில்லாமல் தவிப்பவர்களை மீட்டு இலவசமாக சிகிச்சை அளித்து வருகிறது.
இந்நிலையில், இங்குள்ள நோயாளிகளை பார்வையிட்ட மாதவரம் எம்எல்ஏ சுதர்சனம், தொண்டு நிறுவனத்தினரிடம் விசாரணை நடத்தினார்.
அவர்களின் சேவைகள் குறித்துப் பாராட்டிய எம்எல்ஏ, மேலும் இங்குள்ள ஏழை, எளிய மக்கள் பயன் பெற அவர்களுக்கு எவ்வித உதவிகளையும் செய்யத் தயார் என உறுதியளித்தார்.
இந்நிகழ்வின்போது, சோழவரம் ஒன்றியச் செயலாளர் (திமுக) வே.கருணாகரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.