Enable Javscript for better performance
பொன்னேரி, கும்மிடிப்பூண்டியில் இன்று சுனாமி முன்னெச்சரிக்கை பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    பொன்னேரி, கும்மிடிப்பூண்டியில் இன்று சுனாமி முன்னெச்சரிக்கை பயிற்சி

    By DIN  |   Published on : 24th November 2017 03:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி- நக்கத்துரவு மற்றும் கும்மிடிப்பூண்டி- மெதிப்பாளையம் ஆகிய கிராமங்களில் பொதுமக்களுக்கு சுனாமி குறித்த விழிப்புணர்வு மற்றும் முன்னெச்சரிக்கை பயிற்சிக்கான ஒத்திகை வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
    கடலோர கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களின் இடர்ப்பாடுகளை களைவதே பயிற்சி ஒத்திகையின் நோக்கமாகும். இதன் அடிப்படையில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையமானது , இந்திய பெருங்கடல் முன்னறிவிப்பு அமைப்புடன் இணைந்து ஆந்திரம், மேற்கு வங்கம், தமிழகம், புதுச்சேரி மற்றும் ஒடிஸா ஆகிய மாநிலங்களில் கடலோர மாவட்டங்களில் உள்ள சில கிராமங்களை தேர்வு செய்து சுனாமி முன்னெச்சரிக்கை குறித்த பயிற்சி மற்றும் ஒத்திகை அளிக்கப்படவுள்ளது. 
    இப்பயிற்சி ஒத்திகையானதுகடலோர பகுதியில் உள்ள பொன்னேரி-நக்கத்துரவு, கும்மிடிப்பூண்டி-மெதிப்பாளையம் ஆகிய கிராமங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
    இதில், சுனாமி வரும் பட்சத்தில் இந்திய பெருங்கடல் முன்னறிவிப்பு அமைப்பின் மூலம் எவ்வாறு முன் அறிவிப்புகள் வெளியிடப்படும். அதையடுத்து அந்த தகவல் பரிமாற்றத்தை அரசு துறை மூலம் பாதிக்கப்படும் கிராம மக்களுக்கு எவ்வாறு சென்றடைய வேண்டும். 
    அதேபோல், கடலோர பகுதியில் உள்ள கிராம பொதுமக்களின் அச்சத்தை போக்கும் வகையிலேயே பயிற்சி ஒத்திகை மூலம் விளக்கமாக எடுத்துரைக்கவும் உள்ளதாக இயற்கை பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெவித்தனர். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai