Enable Javscript for better performance
மாற்றுத் திறனாளிகளுக்கு உணவுப் பொருள்கள் அளிப்பு- Dinamani

சுடச்சுட

    
    sathu_peter

    நியூ விஷன் பிளானிங் அறக்கட்டளை சார்பில் பார்வையற்றவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய நிறுவனர் சாதுபீட்டர்.

    திருவள்ளூர் அருகே தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
    திருவள்ளூர் அருகே ஈக்காடு கிராமத்தில் உள்ள சமுதாயக் கூடத்தில் புதன்கிழமை நடபெற்ற நிகழ்ச்சிக்கு, நியூ விஷன் பிளானிங் அமைப்பின் தலைவர் டி.சாதுபீட்டர் தலைமை வகித்தார். இதில், மாற்றுத் திறனாளிகளுக்கு உணவுப் பொருள்கள், சோப்புகள், துணிகள், போர்வைகள் அடங்கிய பொருள்கள் பொட்டலங்களை வழங்கினர். இந்நிகழ்ச்சி மூலம் 120 மாற்றுத் திறனாளிகளுக்கு மொத்தம் ரூ. 40 ஆயிரம் மதிப்பிலான பொருள்கள் வழங்கப்பட்டன. 
    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நியூ விஷன் அறக்கட்டளை நிர்வாகிகள் எஸ்.பிரபாகர், ஐசக், உதயசங்கர் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai