சுடச்சுட

    

    சாலையோரப் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து: 5 பேர் காயம்

    By DIN  |   Published on : 25th November 2017 04:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    car

    சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான கார்.

    திருத்தணி அருகே சாலையோரப் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
    திருவாலங்காடை அடுத்த பழையனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன் (40). தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் வெள்ளிக்கிழமை காலை திருத்தணி முருகன் கோயிலுக்குச் சென்றுவிட்டு, வீட்டுக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தார். சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் அருங்குளம் கூட்டுச் சாலை அருகே வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரப் பள்ளத்தில் கார் தலைகீழாகக் கவிழ்ந்தது. 
    இதில், காரில் பயணம் செய்த சரவணன், அவரது தாய் கொளசல்யா (53), மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் காயமடைந்தனர். அவர்களை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து அரக்கோணம் தாலுக்கா போலீஸார் விசாரித்து வருகின்றனர்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai