சுடச்சுட

  

  பொன்னேரி ரயில்வே பணிமனையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதையொட்டி, அந்த வழித்தடத்தில் சனி (நவ.25) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (நவ.26) ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
  ரத்து செய்யப்படும் மின்சார ரயில்கள்:
  1. கும்மிடிப்பூண்டி -மூர்மார்க்கெட் 
  காலை 9.50, 10.50, 11.20.
  2. மூர்மார்க்கெட் -கும்மிடிப்பூண்டி 
  பிற்பகல் 1.25.
  இடையில் நிறுத்தப்படும் ரயில் சேவைகள்:
  சூளூர்பேட்டையில் இருந்து மூர்மார்க்கெட்டுக்கு காலை 10, 11.15 மணிக்கு புறப்படும் ரயில்கள் கும்மிடிப்பூண்டி வரை மட்டுமே இயக்கப்படும். மூர்மார்க்கெட்டில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு காலை 9.30, 10.25, மதியம் 12.20 புறப்படும் ரயில்கள் மீஞ்சூர் வரை மட்டுமே செல்லும். 
  சென்னை கடற்கரை -கும்மிடிப்பூண்டி இடையே காலை 9.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் மீஞ்சூர் வரை மட்டுமே செல்லும்.
  பாசஞ்ஜர் சிறப்பு ரயில்கள்: மீஞ்சூர் -மூர்மார்க்கெட் இடையே காலை 10.35, 
  11, 11.25, பிற்பகல் 1.05 மணிக்கு பாசஞ்ஜர் சிறப்பு ரயில் இயக்கப்படும்.
  தாமதமாகும் விரைவு ரயில்கள்: 
  1. ரயில் எண் 12711: விஜயவாடா -சென்னை சென்ட்ரல் பினாகினி விரைவு ரயில் பொன்னேரியில் 65 நிமிஷம் நிறுத்தப்படும்.
  2. ரயில் எண் 12296: தானாபூர் -கேஎஸ்ஆர் பெங்களூரு சங்கமித்ரா விரைவு ரயில் கும்மிடிப்பூண்டியில் 60 நிமிஷம் நிறுத்தப்படும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai