Enable Javscript for better performance
பைக் மீது லாரி மோதல்: தீயணைப்பு வீரர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    கும்மிடிப்பூண்டி அருகே பைக் மீது லாரி மோதிய விபத்தில் தீயணைப்பு வீரர் இறந்தார்.
    பெரியபாளையத்தை அடுத்த அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (28) . இவர், கும்மிடிப்பூண்டி வட்டத்துக்கு உள்பட்ட தேர்வாய் கண்டிகை சிப்காட் தீயணைப்பு நிலையத்தில் பணியாற்றி வந்தார்.
    இந்நிலையில், ரமேஷ் வெள்ளிக்கிழமை தனது பைக்கில் பெரியபாளையம் வழியாகச் சென்று கொண்டிருந்தார். சூளைமேனி பகுதியில் சென்ற போது, பின்னால் வந்த லாரி பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் பலத்த காயமடைந்த ரமேஷ் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்தார்.
    இதுகுறித்து ஊத்துக்கோட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரமேஷுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன் தான் திருமணம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai