சுடச்சுட

  
  maksist

  திருவள்ளூர் அருகே ஏரியின் மதகை சீரமைக்கவும், அங்கு இறைச்சிக் கழிவுகள் கொட்டுவதைத் தடுத்து பாதுகாக்க வலியுறுத்தியும் கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், முன் மார்க்சிஸ்ட் கட்சியினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
  ஆர்ப்பாட்டத்தில், திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்தது மேல்நல்லாத்தூர் முதல் நிலை ஊராட்சி ஆகும். 
  இந்த ஊராட்சியில் உள்ள எம்.ஜி.ஆர். தெருவில் கழிப்பறை வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். 
  ஜீவா தெரு, காந்தி தெரு, எல்லையம்மன் கோவில் தெருக்களில் கழிவு நீர் தேங்குகிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய்த்தொற்று ஏற்படும் அபயாம் உள்ளது. மேல்நல்லாத்துர் ஏரியில் உள்ள மதகை சீரமைத்து, அதில் கொட்டப்படும் கோழிக் கழிவுகளை கொட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், ரெட்டி குளம் உள்ளிட்ட அனைத்து ஏரிகளையும் தூர்வாருவதோடு, குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளைப் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. 
  ஆர்ப்பாட்டத்துக்கு திருவள்ளுர் வட்ட குழு உறுப்பினர் கே.ஆறுமுகம் தலைமை வகித்தார். இதில் கட்சியின் மாவட்டச் செயலாளர் டி.பன்னீர்செல்வம், வட்டச் செயலாளர் ஆர்.தமிழ்அரசு, மாவட்டக் குழு உறுப்பினர்கள் எஸ். பூங்கோதை, இ.மோகனா, எஸ். விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai