சுடச்சுட

  
  valembedu

  வல்லம்பேடு குப்பத்தில் சுனாமி பேரிடர் ஒத்திகையில் சுனாமி எச்சரிக்கை தந்து பொதுமக்களை வெளியேற்றும் அதிகாரிகள்.

  கும்மிடிப்பூண்டியை அடுத்த வல்லம்பேடு குப்பத்தில் நடத்தப்பட்ட ஒத்திகை பயிற்சிக்கு கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் ஆர்.எஸ்.ராஜகோபால் தலைமை வகித்தார். 
  நிகழ்வில் கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி ராஜன், கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் தயாநிதி, கும்மிடிப்பூண்டி மண்டல துணை வட்டாட்சியர் தாமோதரன், ஆரம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் முத்துராமலிங்கம், வருவாய் ஆய்வாளர் பாலாஜி முன்னிலை வகித்தனர். இதில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 83 பேர் பங்கேற்றனர். 
  தொடர்ந்து ஹைதராபாத்தில் உள்ள இந்திய பெருங்கடல் சுனாமி முன்னறிவிப்பு அமைப்பின் மூலம் சுனாமி தாக்கக்கூடும் என்ற எச்சரிக்கை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர் மூலம் பொன்னேரி கோட்டாட்சியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, கும்மிடிப்பூண்டி வட்டாட்சியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் இது குறித்து அனைத்துத் துறை அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்தி மீட்பு மற்றும் பாதுகாப்பு குழுவினை வல்லம்பேடு குப்பம் பகுதிக்கு வரவழைத்தார். 
  வல்லம்பேடு குப்பம் கிராமத்தில் மாவட்ட நிர்வாகத்தில் பேரிடர் மேலாண்மை பயிற்சி பெற்ற அப்பகுதியைச் சேர்ந்த 15 முதல் நிலை பொறுப்பாளர்கள் அக்கிராம மீனவர் கூட்டமைப்பு தலைவர் எல்லப்பன் தலைமையில் அனைத்துத் துறை அதிகாரிகளுடன் இணைந்து, பொதுமக்களுக்கு சுனாமி எச்சரிக்கை தந்து அவர்களை அங்கிருந்து இருந்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். 
  பொன்னேரியில்...
  பொன்னேரி வட்டத்தில் கடலோரப் பகுதியான பழவேற்காடு, நக்கத்துறவில் நடத்தப்பட்ட ஒத்திகை நிகழ்ச்சியில், சுனாமி ஆழிப்பேரலை வருவதை போல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 
  இதனை தொடர்ந்து அலாரம் அடிக்கப்பட்டது. பேரிடர் மீட்புக் குழுவினர் அங்கிருந்த உயரமான கட்டடங்களில் ஏறி கொடியசைத்து கடலில் இருக்கும் படகுகளை உள்ளே செல்லுமாறு ஒலி பெருக்கியில் எச்சரித்தனர். மேலும் நக்கத்துறவு சென்ற வருவாய்துறையினர் அங்கிருந்த மக்களை பேருந்துகள் மூலம் பாதுகாப்பாக அழைத்து சென்று ஆண்டாள் மடத்தில் உள்ள அரசு சமுதாய நலக்கூடத்தில் தங்க வைத்தனர். மேலும் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களை பேரிடர் மீட்புக்குழு மற்றும் தீயணைப்புதுறையினர் கடற்கரை பகுதிக்கு சென்று மீட்டனர். மீட்கப்பட்டவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சைகள் அளிப்பது உள்ளிட்ட பல்வேறு சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகைகள் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்நிகழ்ச்சியில் தேசிய பேரிடர் மீட்பு துறையினர், வருவாய்துறையினர், சுகாதாரத்துறையினர், தீயணைப்புதுறையினர், நெடுஞ்சாலைத்துறையினர், மின்சாரத்துறை, மீன்வளத்துறையை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் போலீஸார் பங்கேற்றனர்.


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai