Enable Javscript for better performance
ஆந்திர எல்லையில் சாலை விபத்து: பக்தர்கள் இருவர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    ஆந்திர எல்லையில் சாலை விபத்து: பக்தர்கள் இருவர் சாவு

    By DIN  |   Published on : 28th November 2017 03:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    axident

    கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கம் அருகே திங்கள்கிழமை நடைபெற்ற சாலை விபத்தில் பக்தர்கள் இருவர் இறந்தனர்.
    ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், தேளப்புரவூலு கிராமத்தைச் சேர்ந்தவர் ராம ஆஞ்சநேயலு (31). இவருடன் அதே பகுதியைச் சேர்ந்த சிவகுமார் மற்றும் அவரது மகன் ராகுல் (8) உள்பட 8 பேர் மினி வேனில் நவ-20ஆம் தேதி புறப்பட்டு சபரிமலை கோயிலுக்குச் சென்றனர். வேனை துர்காபிரசாத் ஓட்டினார்.
    அவர்கள் கடந்த புதன்கிழமை சபரிமலையில் சாமி தரிசனம் செய்தனர்.
    தொடர்ந்து, ராமேஸ்வரம் கோயிலுக்குச் சென்றுவிட்டு அங்கிருந்து வீட்டிற்கு திரும்பி வந்துகொண்டிருந்தனர். 
    இந்நிலையில், திங்கள்கிழமை (நவம்பர்-27) அதிகாலையில் ஆரம்பாக்கம் அருகே ஆந்திர மாநிலம் தடாவை அடுத்த ராமாபுரம் பகுதியில் சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் வேன் வந்து கொண்டிருந்தது.
    அப்போது சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரியின் பின்னால் எதிர்பாராத விதமாக வேன் மோதியது. இதில் வேனில் இருந்த அய்யப்ப பக்தர்கள் ராம ஆஞ்சநேயலு, ராகுல் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
    மேலும் அதில் இருந்த சிவகுமார், கோட்டிபள்ளி சிவா, போலா திரிநாத், போனி சீனிவாசராவ், தவிட்டி நாயுடு ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்தனர். ஓட்டுநர் துர்கா பிரசாத்துக்கு லேசான காயம் ஏற்பட்டது. அனைவரும் ஆந்திர மாநிலம் சூலூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
    இந்த விபத்து குறித்து தடா போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சாலை விபத்தில் சபரிமலை பக்தர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai