சுடச்சுட

  

  கொசஸ்தலை ஆற்றில் மணல் குவாரி: கிராம மக்கள் எதிர்ப்பு: ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

  By DIN  |   Published on : 28th November 2017 03:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  vg_rajendran

  பாகசாலை பகுதியில் அரசு மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து எம்எல்ஏ வி.ஜி. ராஜேந்திரன் தலைமையில் ஆட்சியரிடம் மனு கொடுத்த கிராம மக்கள்.

  கொசஸ்தலை ஆற்றில் அரசு மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து லட்சுமி விலாசபுரம் கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பொதுமக்களுக்கு ஆதரவாக திருவள்ளூர் எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் பங்கேற்றார்.
  திருவள்ளூர் அருகே லட்சுமி விலாசபுரத்தில் கொசஸ்தலை ஆற்றுப் பகுதியில் மணல்குவாரி அமைக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டு வருகிறது. 
  இம்முயற்சியை அரசு கைவிட வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் தலைமையில் பொதுமக்கள் 5 கோரிக்கை மனுக்களை ஆட்சியரிடம் நேரில் அளித்தனர். 
  அந்த மனுக்களில் கிராம மக்கள் தெரிவித்திருப்பதாவது: திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த பொன்னாங்குளம், லட்சுமி விலாசபுரம் , பாகசாலை கிராமம் வழியாகச் செல்லும் கொசஸ்தலை ஆற்றில் அரசு மணல் குவாரி அமைக்க ஆயத்த பணிகள் நடந்து வருகிறது. இதை பொதுமக்களின் நலன் கருதி தடை விதிக்க வேண்டும். 
  கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்னர் இப்பகுதியில் மணல் குவாரி அமைத்து விதிமுறைகளை மீறி அதிகமான மணல் எடுக்கப்பட்டது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டதால் விவசாயம் செய்ய முடியவில்லை. குடிநீருக்கும் பெரும் அவதிக்குள்ளானோம்.
  மேலும், பல்வேறு கிராமங்களுக்கான குடிநீர் ஆதாரத்திற்கான ஆழ்குழாய் கிணறுகளும் கொசஸ்தலை ஆற்றில் அமைக்கப்பட்டுள்ளது. குவாரியினால் இவையும் பாதிக்கப்படும் சூழ்நிலையுள்ளது.
  அதோடு, இப்பகுதி மக்கள் விவசாய நிலங்களுக்கு சென்று வரும் வழியாகவும், கால்நடைகள் நடமாடும் பகுதியாகவும் இருப்பதால் இங்கு குவாரி அமைத்தால் விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. இதனால், இப்பகுதியில் மணல்குவாரிகள் அமைக்கக்கூடாது என மனுவில் தெரிவித்துள்ளனர். 


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai