சுடச்சுட

  
  teacher

  ஆறு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, நெற்றியில் பட்டை நாமம் போட்டு நூதன முறையில்ஆர்ப்பாட்டம் நடத்திய சத்துணவு ஊழியர்கள்.

  தமிழ்நாடு ஓய்வூதிய சத்துணவு ஊழியர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நெற்றியில், நாமம் போட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
  தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி மைய ஓய்வூதியர் சங்கம் சார்பில், திருத்தணி கமலா தியேட்டர் அருகே, நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியத் தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். செயலர் ஜெகந்நாதன் வரவேற்றார். 
  தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி திருவள்ளூர் மாவட்டத் தலைவர் சத்தியநாதன் தொடங்கி வைத்தார்.
  இதில், 100க்கும் மேற்பட்டோர் கருப்பு பேட்ஜ் அணிந்து, நெற்றியில் பட்டை நாமம் போட்டு, தமிழ்நாடு ஓய்வு சட்ட விதிகளின்படி, குறைந்தபட்ச ஊதியம் 7,850 ரூபாய் வழங்க வேண்டும். 
  மருத்துவக் காப்பீடு, ஈமக்கிரியை செலவு மற்றும் பொங்கல் கருணைத் தொகை வழங்க வேண்டும், மாத ஓய்வூதியம், முதல் தேதியில் வழங்க வேண்டும், எட்டாவது ஊதியக்குழுவின் படி சொற்ப ஓய்வு ஊதியமாக ரூ. 500 உயர்த்தியதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினர்.
  இதில், ஒன்றியப் பொருளாளர் லலிதா உள்ளிட்ட சத்துணவு ஊழியர்கள் பங்கேற்றனர்.


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai