சுடச்சுட

  

  பொன்னேரி அரசு மருத்துவமனையில் நூலகம்: தலைமை மருத்துவரின் முன்மாதிரி நடவடிக்கை

  By DIN  |   Published on : 28th November 2017 03:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பொன்னேரி அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு வரும் பெண்கள் படிப்பதற்காக நூலகம் அமைக்க தலைமை மருத்துவர் முன்மாதிரி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். 
  திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி ரயில் நிலைய சாலையில் தலைமை அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு புறநோயாளிகள் பிரிவில் நாள்தோறும் 500-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். உள் நோயாளிகள் பிரிவில் 100-க்கும் மேற்பட்டோர் தங்கி சிகிச்சை பெற்று வருவர். 
  இம்மருத்துவமனையில் சித்த மருத்துவப் பிரிவும் தனி கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள மகப்பேறு பிரிவில் மாதத்திற்கு 150 முதல் 200 வரை மகப்பேறுகள் நடைபெறுகின்றன. 
  இங்கு பிரசவத்திற்கு வரும் பெண்கள் உள்நோயாளிகளாக 15அல்லது 20நாள்கள் வரை தங்கி சிகிச்சை பெற்றுச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. அவர்கள் பொழுதினை போக்கவும், அதே நேரத்தில், அறிவை வளர்க்கும் நோக்கில் ஒரு முன் மாதிரியாக இங்கு நூலகம் அமைக்க மருத்துவர் அனுரத்னா நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். 
  நூலகம் அமைப்பதற்குத் தேவையான (ஜாதி, மதம், அரசியல் தொடர்புடைய புத்தகங்களைத் தவிர்த்து) அனைத்துப் புத்தகங்களையும் வழங்கும்படி சமூக வலைதளங்களில் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். 
  பொதுமக்கள் பாராட்டு: நோயாளிகளுக்கு அலட்சியமாக சிகிச்சை அளிப்பது, சிகிச்சையில் தாமதம் உள்ளிட்ட பல்வேறு குறைகள் (ஒரு சில அரசு மருத்துமனைகளில்) இன்னமும் நீடித்து வருவதாக பொதுமக்கள் தரப்பில் புகார் உள்ளது. அதே நேரத்தில் பொன்னேரி அரசு மருத்துவமனையில் பெண்களின் அறிவை வளர்க்கும் நோக்கிலும், அவர்களின் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கிலும் நூலகம் அமைப்பதென்பது ஒரு முன் மாதிரி முயற்சியாகும். பொன்னேரி பகுதி பொதுமக்களும் மருத்துவர் அனுரத்னாவின் முன் மாதிரி முயற்சிக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai