சுடச்சுட

    

    கும்மிடிப்பூண்டியை அடுத்த சித்தராஜகண்டிகை பகுதியில் மர்ம நபர்கள் அடுத்தடுத்த 3 வீடுகளில் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    கும்மிடிப்பூண்டியை அடுத்த சித்தராஜகண்டிகை டி.ஆர்.பி நகரைச் சேர்ந்தவர் மாரி (32). பன்றி வளர்க்கும் தொழில் செய்துவரும் இவருக்கு, இரு வீடுகள் உள்ளன. இந்நிநிலையில், திங்கள்கிழமை இரவு மாரி, ஒரு வீட்டை பூட்டிவிட்டு, இன்னொரு வீட்டில் குடும்பத்துடன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த ரூ. 70 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றனர். மேலும், அதே பகுதியைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலரான ஜெயச்சந்திரன் வீட்டின் பூட்டை உடைத்து அங்கிருந்த பைக்கை திருட முயன்றனர். பைக்கின் பூட்டை உடைக்க முடியாததால் அதை சேதப்படுத்திச் சென்றனர்.
    தொடர்ந்து அருகே உள்ள ரேணுகா (35) வீட்டின் கதவை உடைக்க முயன்ற போது, சப்தம் கேட்டு அவர் வீட்டிற்கு வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது மர்ம நபர் 3 பேர் நிற்பதைக் கண்டு சப்தமிட்டதால், மர்ம நபர்கள் ரேணுகா மீது கற்களை வீசி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
    இதுகுறித்த புகாரின் பேரில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களைத் தேடிவருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai