சுடச்சுட

  

  அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாணவ, மாணவிகளுக்கான போட்டிகள்

  By DIN  |   Published on : 29th November 2017 03:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு திருவள்ளூர் மாவட்ட அளவில் ஓவியம் உள்பட பல்வேறு வகையான போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன. 
  பள்ளி மாணவ, மாணவிகள் ஒவ்வொருவரும் கற்பனைத் திறனை வளர்த்துக் கொள்ளும் நோக்கத்திலும், தனித்தன்மையுடன் செயல்படும் வகையில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவ, மாணவிகளுக்கு திருவள்ளூர் மாவட்ட அளவில் அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட வளாகத்தில் பேச்சு, ஓவியம் மற்றும் கட்டுரைப் போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டியை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் தொடங்கி வைத்தார். இதில் பெண்கள் கல்வி, சுத்தம், சுகாதாரம் , கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் ஆகிய தலைப்புகளில் பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. 
  இதில் 1,2,3 ஆகிய வகுப்புகளுக்கு ஓவியப் போட்டியும், 4, 5-ஆம் வகுப்புக்கு பேச்சுப் போட்டியும், 6-முதல் 8-ஆம் வகுப்புகளுக்கு ஓவியம், பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகளும் நடத்தப்பட்டன. இதில் ஏற்கெனவே ஒன்றிய அளவில் நடந்த போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகள் 140 பேர் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டனர். இவற்றில் சிறப்பிடங்கள் பெறும் மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்படும். அதோடு மண்டல , மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கவும் அனுப்பி வைக்கப்படுவர்.
  இதற்கான ஏற்பாடுகளை அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட உதவி அலுவலர் நந்தகுமார், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர் செய்திருந்தனர். 
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai