சுடச்சுட

  
  rajendren

  திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு இணையதளம் வழியாக நடந்த கலந்தாய்வில் தேர்வு செய்யப்பட்டோருக்கு பணி நியமன ஆணைகளை முதன்மைக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் வழங்கினார். 
  மாநில அளவில் கடந்த 2015-2016- ஆம் கல்வி ஆண்டில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் 195 பேர் பள்ளிக் கல்வித் துறைக்கு தேர்ந்து எடுக்கப்பட்டனர். இதில் அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியிடங்களுக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் இணையதளம் வழியாக நியமன கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
  இதில் திருவள்ளூர் மாவட்டத்தில் பாடவாரியாக ஆசிரியர்கள் 7 பேர் தேர்வு செய்யப்பட்டு, பணியிடம் ஒதுக்கப்பட்டதற்கான நியமன ஆணையை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வழங்கினார். நேர்முக உதவியாளர் (மேல்நிலைக் கல்வி) திருவரசு உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai