சுடச்சுட

  

  திருவள்ளூர் அருகே ஊராட்சி செயலாளரை பணி செய்யவிடாமல் தடுத்து, தாக்கியது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
  இதுகுறித்து செவ்வாப்பேட்டை போலீஸார் தரப்பில் கூறியதாவது: 
  திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்தது வேப்பம்பட்டு கிராமம். இக்கிராம ஊராட்சியில் செயலாளராக ஹரி (39) பணிபுரிந்து வருகிறார். இந்த ஊராட்சியில் வரதராஜபுரம் பகுதியைச் சேர்ந்த மணி (37) சாலை அமைத்துத் தருமாறு பலமுறை கேட்டுள்ளார். 
  இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் கேட்டு நடவடிக்கை எடுப்பதாக ஹரி ஒவ்வொரு முறையும் கூறி வந்ததாகத் தெரிகிறது. ஆனால், அப்பகுதியில் சாலை அமைக்க எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மணி செவ்வாய்க்கிழமை ஊராட்சிப் பணிகளில் ஈடுபட்டிருந்த ஹரியை தகாத வார்த்தையால் பேசி, கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம். மேலும் பணி செய்ய விடாமல் தடுத்ததாகக் கூறப்படுகிறது.
  இதுகுறித்து செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் ஹரி புகார் செய்தார். அதன்பேரில், போலீஸார் மணி மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai