Enable Javscript for better performance
டெங்கு மற்றும் தொற்று நோய் தடுப்பு பணிகள்: ஆட்சியர் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    டெங்கு மற்றும் தொற்று நோய் தடுப்பு பணிகள்: ஆட்சியர் ஆய்வு

    By DIN  |   Published on : 29th November 2017 03:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் டெங்கு மற்றும் தொற்று நோய்த் தடுப்புப் பணிகள் குறித்து ஆட்சியர் எ.சுந்தரவல்லி திங்கள்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டார். 
    பூண்டியை அடுத்த கலவை கிராமத்தில் டெங்கு மற்றும் தொற்று நோய் தடுப்பு குறித்து வீடுகள் தோறும் சென்று ஆட்சியர் ஆய்வு செய்தார். அப்போது, பொதுமக்களிடம் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் பிளாஸ்டிக் பொருள்கள் மற்றும் தேங்காய் சிரட்டைகள் ஆகியவை போட்டு வைக்கக் கூடாது. வீட்டின் சுற்றுப்புறங்களையும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றார். 
    அதேபோல், ஊராட்சிகளில் தூய்மைப் பணியாளர்கள் நாள்தோறும் குப்பைகளை அகற்றவும் வலியுறுத்தினார். பின்னர் டெங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயமும் வழங்கி, அதில் உள்ள நோய் எதிர்ப்பு சக்திகள் குறித்து ஆட்சியர் விளக்கமாக எடுத்துரைத்தார். அப்போது, வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai