சுடச்சுட

    
    tiruverkadu

    திருவேற்காடு நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் கழிவுநீர் கொட்டப்படுவதால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
    திருவேற்காடு நகராட்சிக்கு உள்பட்ட நூம்பல், சூசையா நகர் ஆகிய பகுதிகளில் 2,500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. 
    இங்கு மழைநீர் கால்வாய் கட்டப்பட்டுள்ளது. 
    நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தாத காரணத்தால், திருவேற்காடு, கோலடி, வேலப்பன்சாவடி உள்ளிட்ட பகுதிகளில் சேகரமாகும் கழிவுநீர் தனியார் லாரிகள் மூலம் எடுத்து வரப்பட்டு, சூசையா நகரில் உள்ள மழைநீர் கால்வாயிலும், காலி இடத்திலும் கொட்டப்படுகிறது.
    இதனால் கொசு உற்பத்தியாகி தொற்று நோய், டெங்கு காய்ச்சல் பரவம் அபாயம் உள்ளது. 
    இதுகுறித்து இப்பகுதி மக்கள், சமூக ஆர்வலர்கள் முதல்வரின் தனிப் பிரிவுக்கு புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 
    எனவே, கழிவுநீர் கொட்டப்படுவதைத் தடுக்க திருவள்ளூர் ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai