சுடச்சுட

    

    மீலாது நபியை முன்னிட்டு மதுக்கடைகளை டிச.2-இல் மூட ஆட்சியர் உத்தரவு

    By DIN  |   Published on : 29th November 2017 03:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நபிகள் நாயகம் பிறந்த நாளை (மீலாது நபி) முன்னிட்டு டிச.2-ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மதுக்கடைகளை மூட ஆட்சியர் எ.சுந்தரவல்லி உத்தரவிட்டுள்ளார். 
    இது குறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: திருவள்ளூர் மாவட்டத்தில் நபிகள் நாயகம் பிறந்த நாளான டிச.2-ஆம் தேதி, தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், அனைத்து ஹோட்டல் மற்றும் கிளப்புகளில் உரிமம் பெற்று செயல்பட்டு வரும் மது பானக் கூடங்கள் அதனுடன் இணைந்த பார்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்க வேண்டும். 
    எனவே அன்றைய நாளில் மதுபான விற்பனை, மதுபானத்தை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குக் கடத்துதல், பதுக்கி வைத்தல் போன்ற செயல்கள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டோர் மீது தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்கச் சட்டப்பிரிவின் படி குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அதில் அவர் எச்சரித்துள்ளார். 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai