சுடச்சுட

  

  வீட்டுமனை வாங்கித் தருவதாக ரூ.29.30 லட்சம் மோசடி: தலைமை ஆசிரியர் மீது புகார்

  By DIN  |   Published on : 29th November 2017 03:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  application

  திருப்பாச்சூர் அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த மக்கள்.

  குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வீட்டுமனை வாங்கித் தருவதாக ரூ.29.30 லட்சம் மோசடி செய்ததாக அரசு பள்ளி தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்ட மக்கள் ஆட்சியர் எ.சுந்தரவல்லியிடம் புகார் மனு கொடுத்தனர். 
  கடம்பத்தூர் அருகே உள்ள திருப்பாச்சூர் அரசுப் பள்ளியில் தலைமையாசிரியராக பணிபுரிந்து வருபவர் மேகலா (எ)பர்வீன். இவர் சென்னையை அடுத்த அம்பத்தூர் அயப்பாக்கத்தில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் குறைந்த விலையில் வீட்டுமனைகள் வாங்கித் தருவதாக மணலி, திருவொற்றியூர், பாடி, ஒரகடம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொது மக்களிடம் கூறியுள்ளார். இதற்கு முதலில் ரூ.60 ஆயிரம் பணம் கொடுக்க வேண்டும் என தலைமையாசிரியர் வலியுறுத்தினார். இதை உண்மையென நம்பிய பொதுமக்களிடம் ரூ.10 ஆயிரம் முதல் ரூ. 60 ஆயிரம் வரை சுமார் 100-க்கும் மேற்பட்டோரிடம் மொத்தம் ரூ.29.30 லட்சம் வசூலித்துள்ளார்.
  பின்னர், நீண்ட நாள்களாகியும் குடியிருப்புகான இடம் பெற்றுத் தராமல் காலதாமதம் செய்துள்ளார். இதையடுத்து, பொதுமக்கள் அவரிடம் இடம் வாங்கிக் கொடுங்கள் அல்லது எங்கள் பணத்தைத் திருப்பிக் கொடுங்கள் என்று கேட்டபோது, இடமும் தரமுடியாது பணமும் தரமுடியாது என கூறி தலைமையாசிரியர் மிரட்டல் விடுத்துள்ளார். 
  இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் தலைமையாசிரியரிடம் இருந்து பணத்தைப் பெற்றுத் தரவும், அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
  இந்த மனுவின் மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் உறுதியளித்த பின்னர் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai