Enable Javscript for better performance
2,263 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள்: அமைச்சர் வழங்கினார்- Dinamani

சுடச்சுட

    

    2,263 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள்: அமைச்சர் வழங்கினார்

    By DIN  |   Published on : 29th November 2017 03:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    venugobal

    பூந்தமல்லியில் பள்ளி மாணவர்கள் 2,263 பேருக்கு விலையில்லா மடிக்கணினிகளை ஊரக தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின் திங்கள்கிழமை வழங்கினார். 
    பூந்தமல்லி அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஆட்சியர் எ.சுந்தரவல்லி தலைமை வகித்தார். இதில் ஊரக தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின் கலந்து கொண்டு, மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கிப் பேசியதாவது: திருவள்ளூர் மாவட்டத்தில் 111 பள்ளிகளில் 21,903 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட உள்ளன. 
    இதில், பூந்தமல்லி பகுதிகளைச் சேர்ந்த அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 439, குருவாயல் அரசு மேல்நிலைப் பள்ளியில் 75 , வெள்ளியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 239, கீழ்மணம்பேடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 212, காக்களூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 21, திருமழிசை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 200, சென்னீர்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 64, பூந்தமல்லி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 403 , செவ்வாப்பேட்டை அரசு (மகளிர்) ஆதிதிராவிட நல மேல்நிலைப் பள்ளி-112, செவ்வாப்பேட்டை அரசு (ஆண்கள்) ஆதிதிராவிட நல மேல்நிலைப் பள்ளி- 68, கோலப்பன்சேரி அரசு ஆதிதிராவிட நல மேல்நிலைப் பள்ளி-69 என மொத்தம் 1,902 பேருக்கு விலையில்லா மடிக் கணினிகள் வழங்கப்பட்டன. 
    அதேபோல், பூந்தமல்லி சரோஜினி வரதப்பன் பெண்கள் மேல்
    நிலைப் பள்ளியில் 361 பேருக்கும், 12 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் என மொத்தம் 2,263 பேருக்கு மடிக்கணிகள் வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 
    நிகழ்ச்சியில் திருவள்ளூர் எம்.பி. பி.வேணுகோபால், பொன்னேரி எம்எல்ஏ பி.பலராமன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.ராஜேந்திரன், வருவாய் கோட்டாட்சியர் (பொ) நாராயணன், பூந்தமல்லி வட்டாட்சியர் ரமா, அரசு அலுவலர்கள், பள்ளித் தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 



     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai