சுடச்சுட

  

  குடிநீர் பிரச்னைக்குத் தீர்வு காணக் கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகை

  By DIN  |   Published on : 30th November 2017 04:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  women

  திருவள்ளூர் நகராட்சியில் குடிநீர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வலியுறுத்தி, காலி குடங்களுடன் பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். 
  திருவள்ளூர் நகராட்சியில் 3-வது வார்டுக்கு உள்பட்டது எடப்பாளையம் கிராமம். இப்பகுதியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு நகராட்சி சார்பில் ஆழ்துளைக் குழாய்க் கிணறு அமைத்து மின் மோட்டார் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது. இந்த மின் மோட்டார் அமைத்திருந்த இடத்தை தனி நபர் ஆக்கிரமித்ததாக நகராட்சி சார்பில் வழக்குத் தொடரப்பட்டு நடைபெற்று வந்தது. இந்நிலையில், அந்த இடம் தனி நபருக்குச் சொந்தமானது என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து, மின் மோட்டார் அமைத்திருந்த இடத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. 
  இதனால் ஆத்திரம் அடைந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். 
  அப்போது, வழக்கின் போது நகராட்சி சார்பில் யாரும் ஆஜராகாததாலும், நிர்வாகத்தின் அலட்சியத்தாலும்தான் தீர்ப்பு எதிர்த் தரப்புக்குச் சாதகமானது என மக்கள் குற்றம் சாட்டினர். அதைத் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஏற்கெனவே உள்ள இடத்தில் இருந்து மீண்டும் குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறியதைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai