சுடச்சுட

    

    பொறுப்பூதியம் வழங்கக் கோரி கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

    By DIN  |   Published on : 30th November 2017 04:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    vao_union

    திருவள்ளூர் மாவட்டத்தில் பொறுப்பூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
    வட்டாட்சியர் அலுவலக வளாகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். சங்க நிர்வாகி புகழேந்தி வரவேற்புரையாற்றினார். மாவட்ட இணைச் செயலாளர் திருமால் ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்தார். 
    இதில், கிராம நிர்வாக அலுவலர்கள் மாவட்ட மாறுதல் உத்தரவை உடனே செயல்படுத்த வேண்டும். உள்பிரிவு பட்டா மாறுதல்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் பரிந்துரை இல்லாமல் செய்வதால் சட்டம் - ஒழுங்குப் பிரச்னை மற்றும் நீதிமன்ற வழக்குகள் அதிகமாக ஏற்படுவதைத் தடுக்கவும், சான்றுகள் வழங்க இணையதள சேவைக்கான தொகையை அளிக்க உத்தரவிட்டும் இதுவரையில் வழங்கப்படவில்லை மற்றும் கூடுதல் பொறுப்பு வகிக்கும் அலுவலர்களுக்கு பொறுப்பூதியம் நிறுத்தப்பட்டதை திரும்ப வழங்குதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
    இதில், வட்ட த் தலைவர் சீனிவாசன், செயலாளர் சசிகுமார், பொருளாளர் சுப்பிரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
    இதேபோல், ஒவ்வொரு வட்டாரத் தலைமையிடத்திலும் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai