சுடச்சுட

  

  முதல்வர் கோப்பை - விளையாட்டு போட்டிகள்: 1050 பேர் பங்கேற்பு

  By DIN  |   Published on : 30th November 2017 04:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  cm_cup

  திருவள்ளூரில் மாவட்ட அளவில் நடைபெற்ற முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். 
  மாவட்ட விளையாட்டு மைதான வளாகத்தில் நடைபெற்ற முதல்வர் கோப்பை - விளையாட்டு போட்டிகளின் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. இதில் மாணவ-மாணவிகள் 1050 பேர் கலந்து கொண்டனர். 
  இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அலுவலர் அருணா தலைமை வகித்தார். இப்போட்டிகளை கொடியசைத்துத் தொடக்கி வைத்து ஆட்சியர் எ.சுந்தரவல்லி பேசுகையில், மாணவ, மாணவிகளின் உடல்நலத்தையும், மனநலத்தையும் வலிமைப்படுத்தும் வகையில் பல்வேறு வகைகளில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் புதன்கிழமை தொடங்கி, நவ. 30 மற்றும் டிச.2-ஆம் தேதி வரையிலும் நடைபெற இருக்கிறது. இதுபோன்ற போட்டிகளில் மாணவ, மாணவிகள் அதிக அளவில் பங்கேற்க வேண்டும் என்றார். 
  இதில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசாக ரூ.1000, 2-வது பரிசாக ரூ.750 மற்றும் 3-ஆவது பரிசாக ரூ.500 வழங்கப்பட இருக்கிறது. இந்த விளையாட்டுப் போட்டிகளுக்கு, மாவட்ட விளையாட்டுத்துறை அலுவலர்கள் மற்றும் பயிற்றுநர்கள் ஆகியோர் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். 


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai