சுடச்சுட

  
  lorry_driver

  பணம் வசூல்: போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள். 

  திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் மணல் லாரி ஓட்டுநர்களிடம் போலீஸார் பணம் வசூல் செய்வதைக் கண்டித்து லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். 
  செங்குன்றம் பகுதியில் 800க்கும் மேற்பட்ட மணல் லாரிகள் இயங்கி வருகின்றன. இந்த லாரிகள் மூலம் ஆந்திராவில் இருந்து கொண்டுவரப்படும் மணலை பாதுகாப்புக்காக பாடியநல்லூர் அங்காளீஸ்வரி கோயில் மைதானத்தில் கொட்டி வைக்கின்றனர். 
  பின்னர், சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு லாரிகள் மூலம் இந்த மணல் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 
  இவ்வாறு இரவு நேரங்களில் செல்லும் லாரிகளை காவல்
  துறையினர் தடுத்து நிறுத்தி பணம் வசூல் செய்வதாக லாரி ஓட்டுநர்கள் குற்றம் சாட்டினர். 
  இதையடுத்து, செங்குன்றம் சுற்றுவட்டார மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தலைவர் இன்னாசி தலைமையில், செயலாளர் கே.எம்.டில்லி முன்னிலையில் ஓட்டுநர்கள் அனைவரும் செவ்வாய்க்கிழமை முதல் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து இன்னாசி கூறியதாவது: நாங்கள் ஆந்திராவில் இருந்து மணலைக் கொண்டு வந்து, கலப்படம் செய்யாமல் சென்னைக்கு விநியோகம் செய்து வருகிறோம். 
  ஆனால், மணலில் கலப்படம் செய்வதாக சில மர்ம நபர்கள் வதந்திகளைப் பரப்பி வருகின்றனர். 
  இவ்வாறு வதந்தி பரப்புவோர் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். மணலை வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்த பின்னரே விநியோகம் செய்து வருகிறோம். 
  பொய்யான வதந்திகளை நம்பி, லாரி உரிமையாளர்களையும், ஓட்டுநர்களையும் கைது செய்வதைத் தடுக்க வேண்டும். மேலும், ஓட்டுநர்களிடம் பணம் வசூல் செய்யும் போலீஸார் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றார்.    

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai