சிஐடியு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மோட்டார் வாகனத் தொழிலாளர்களின் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தையொட்டி, சிஐடியு தொழிற்சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கும்மிடிப்பூண்டி பேருந்து  நிலையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட  கம்யூனிஸ்ட்  கட்சியினர்.
கும்மிடிப்பூண்டி பேருந்து  நிலையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட  கம்யூனிஸ்ட்  கட்சியினர்.
Published on
Updated on
1 min read


மோட்டார் வாகனத் தொழிலாளர்களின் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தையொட்டி, சிஐடியு தொழிற்சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்க கும்மிடிப்பூண்டி மற்றும் பைபாஸ் கிளை, சாலைப் போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கத்தினர் சார்பில், கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட சிஐடியு தொழிற்சங்க துணைச் செயலாளர் ஜெ.ஆனந்தன் தலைமை வகித்தார். கும்மிடிப்பூண்டி பகுதி தலைவர் நித்தி ஆனந்த், மாவட்டச் செயலாளர் சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும், பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும், கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை, பெரியபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் எரிவாயு நிலையங்களை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில், ஆட்டோ மற்றும் வாகன ஓட்டுநர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.