திருவள்ளூர் மாவட்ட அளவிலான மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 17) நடைபெற இருப்பதாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அலுவலர் அருணா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்த ஆண்டுக்கான மாவட்ட அளவிலான மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள் மேலே குறிபிட்ட நாளில் நடைபெற உள்ளன. இதில், தட களம், நீச்சல், கால்பந்து மற்றும் சிலம்பம், 100 மீ, 400 மீ, 1,500 மீ, நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், வட்டு எறிதல், குண்டு எறிதல், நீச்சல் மற்றும் சிலம்பம் ஆகிய போட்டிகளும் நடத்தப்படவுள்ளன.
இப்போட்டியில் மாணவ, மாணவிகள் மற்றும் மாணவர்கள்அல்லாதோர் கலந்து கொள்ளலாம். போட்டியில் கலந்து கொள்ள வயது வரம்பு இல்லை.
எனவே விருப்பம் உள்ள மாணவ, மாணவிகள் தங்கள் பள்ளித் தலைமை ஆசிரியரிடமிருந்து வயது மற்றும் படிப்புச் சான்றிதழ் பெற்று போட்டி நடைபெற இருக்கிற அன்றைய நாள் காலை 8 மணியளவில் நுழைவு படிவத்துடன் சேர்த்து சமர்ப்பிப்பது அவசியம். அதேபோல் மாணவ, மாணவிகள் அல்லாதோர் குடும்ப அட்டை, ஆதார் அட்டை நகல்களை சமர்ப்பிக்க வேண்டும். இதில், கட்டாயம் நுழைவு படிவம் சமர்ப்பிக்கும் நபர்கள் மட்டுமே போட்டியில் பங்கு பெற அனுமதிக்கப்படுவர்.
இப்போட்டியில் பங்கேற்போருக்கு தினப்படி மற்றும் பயணப்படி எதுவும் வழங்கப்படமாட்டாது.
மேலும், தட களம், நீச்சல் போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெறுவோருக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களும், குழுப் போட்டியில் வெற்றி பெற்ற முதல் இரண்டு அணிகளுக்கு பரிசு, சான்றிதழ்களும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.