மதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்

கும்மிடிப்பூண்டி அருகே, அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் திங்கள்கிழமை மதிய உணவு அருந்திய 27 மாணவர்களுக்கு வாந்தி,
ஈகுவார்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாணவரின் சிகிச்சை குறித்து விசாரணை நடத்திய ஆட்சியர் எ.சுந்தரவல்லி.
ஈகுவார்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாணவரின் சிகிச்சை குறித்து விசாரணை நடத்திய ஆட்சியர் எ.சுந்தரவல்லி.

கும்மிடிப்பூண்டி அருகே, அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் திங்கள்கிழமை மதிய உணவு அருந்திய 27 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதையடுத்து, சிகிச்சைக்காக சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 
ஈகுவார்பாளையம் ஊராட்சியை சேர்ந்த குமரன் நாயக்கன் பேட்டையில் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 28 மாணவர்கள் பயின்று வரும் நிலையில் 27 மாணவர்கள் பள்ளியில் தயாரிக்கப்பட்ட மதிய உணவான கேரட் உள்ளிட்ட காய்கறிகளால் ஆன கலவை சாதத்தையும், முட்டையையும் 
சாப்பிட்டனர்.
தொடர்ந்து மதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனே மாணவர்கள் ஈகுவார்பாளையத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர்.
தொடர்ந்து, 5ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் திருமலை(10), ஜெயசூர்யா(10), ஹேமவர்ஷினி(10), கௌதம்(10) 4ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் விஜயகுமாரி(9), கிரி(10) ராஜேஷ்(10), ராஜன்(9), சரசு(9), ஐசக்(8), 2ஆம் வகுப்பு மாணவி அனுசுயா(7), 3ஆம் வகுப்பு மாணவி ஹெமிமா(8), முதல் வகுப்பு மாணவர் கவின்(6), அபிஷேக்(6) ஆகிய 14 பேர் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.
தகவல் அறிந்து வந்த ஆட்சியர் எ.சுந்தரவல்லி மாணவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
மாணவர்களுக்கு எதனால் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது என உறுதியாகத் தெரியாத நிலையில், சமைக்கப்பட்ட உணவில் பல்லி விழுந்திருக்கலாம் அல்லது மாணவர்களுக்கு தரப்பட்ட முட்டை கெட்டுப் போனதாக இருக்கலாம். விசாரணைக்குப் பிறகே விவரம் தெரியவரும் என ஆட்சியர் சுந்தரவல்லி தெரிவித்தார். இந்நிலையில் ஈகுவார்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள 13 மாணவர்களுக்கு மருத்துவர் ராஜேஷ்குமார் தலைமையிலும், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முருகதாஸ் மேற்பார்வையிலும் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
இந்த சம்பவம் குறித்து, பொன்னேரி கோட்டாட்சியர் முத்துசாமி, கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் ஆர்.எஸ்.ராஜகோபால் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்ட மதிய உணவு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com