தமிழகம் முழுவதும் விவசாய சந்தையை பசுமைத் தாயகம் தொடங்கும்: சௌமியா அன்புமணி

பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் தமிழகம் எங்கும் விவசாய சந்தை அமைக்கப்படும் என கும்மிடிப்பூண்டி அருகே

பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் தமிழகம் எங்கும் விவசாய சந்தை அமைக்கப்படும் என கும்மிடிப்பூண்டி அருகே வியாழக்கிழமை நடைபெற்ற விவசாய சந்தை திறப்பு விழாவில் அமைப்பின் நிறுவனத் தலைவர் சௌமியா அன்புமணி தெரிவித்தார்.
கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூர்-சுண்ணாம்புகுளம் சாலையில் நடைபெற்ற  இந்த விவசாய சந்தை திறப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக பசுமைத் தாயகம் அமைப்பின் நிறுவனத் தலைவர் சௌமியா அன்புமணி கலந்து கொண்டு சந்தையை திறந்து வைத்தார். அமைப்பின் மாநிலச் செயலர் இரா.அருள் முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.
நிகழ்வுக்கு பாமக மாநில துணைப் பொதுச் செயலர் மா.செல்வராஜ், மாவட்டச் செயலர் குபேந்திரன், பசுமைத் தாயகம் மாநில துணைச் செயலர் பத்மநாபன், மாவட்டச் செயலர் பசுமை முத்து, முன்னாள் மாவட்டச் செயலர் அமுதம் பாஸ்கர்,  ஒன்றியச் செயலர் எஸ்.டி.டி.சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்வில் விவசாய சந்தையை திறந்து வைத்துசௌமியா அன்புமணி பேசியது: பசுமைத் தாயகத்தின் சார்பில் விவசாயிகள் அவரவர் விளைபொருளை ஒரே இடத்தில் வைத்து விற்பனை செய்யும் வகையிலும், தரமான இயற்கை முறையில் விளையும் காய்கறிகளை பொதுமக்கள் வாங்கும் வகையில் விவசாய சந்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 
இதே போன்று தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் இந்த சந்தை தொடங்கப்படும். விவசாய சந்தையில் காய்கறிகள், கீரை வகைகளை வாங்கும் பொதுமக்கள் நெகிழிப் பைகளுக்கு பதிலாக, துணிப்பை மற்றும் சணல் பையைப் பயன்படுத்த வேண்டும். இதற்காக சந்தையில் துணிப்பைகள் விற்பனைக்கு வைக்கப்படும் என்றார்.
நிகழ்வுக்கான ஏற்பாடுகளை பசுமைத் தாயகம் அமைப்பைச் சேர்ந்த  எஸ்.சேகர், ஆர்.டி.சங்கர், சுமலதா, வினோபா பூபதி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com