தமிழ் உச்சரிப்பில் உள்ளதுபோல் ஊர் பெயர் ஆங்கிலத்திலும் அமைய நடவடிக்கை: ஆட்சியர் தகவல்

தமிழ் உச்சரிப்பில் உள்ளதுபோன்று ஊர் பெயர்களை ஆங்கிலத்தில் அமைத்து செயல்படுத்துவதற்கான

தமிழ் உச்சரிப்பில் உள்ளதுபோன்று ஊர் பெயர்களை ஆங்கிலத்தில் அமைத்து செயல்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தெரிவித்தார்.
 திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகக் கூட்டரங்கத்தில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஊர் பெயர்களை தமிழ் உச்சரிப்பில் இருப்பது போன்று ஆங்கிலத்திலும் அமைத்து செயல்படுத்துவது தொடர்பான முதல்கட்ட உயர்நிலைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தலைமை வகித்துப் பேசியது:
பதிவு ஆவணங்களின் அடிப்படையில் ஊர்களின் பெயர்கள் தமிழ் உச்சரிப்பில் இருப்பது போலவே ஆங்கிலத்திலும் உச்சரிப்பதற்கான நடவடிக்கை தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கெனவே இதுதொடர்பாக பல்வேறு உள்ளாட்சி துறைகள் மற்றும் பொதுமக்களுக்கும் தெரிவித்து கருத்துகள் கோரப்பட்டன.
 அந்த வகையில் கருத்துகளைத் தெரிவிக்க விரும்புவோர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றார் அவர்.
கூட்டத்தில் மண்டல நகராட்சிகளின் இணை ஆணையர், நில அளவை பதிவேடுகளின் உதவி இயக்குநர், ஊராட்சிகளின் உதவி இயக்குநர், பேரூராட்சிகளின் உதவி இயக்குநர்  மற்றும் தமிழறிஞர்கள்  பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com