Enable Javscript for better performance
ஆந்திராவில் பொது வேலை நிறுத்தம்: தமிழகப் பேருந்துகள் முடங்கின- Dinamani

சுடச்சுட

    

    ஆந்திராவில் பொது வேலை நிறுத்தம்: தமிழகப் பேருந்துகள் முடங்கின

    By DIN  |   Published on : 09th February 2018 12:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆந்திராவில் பல்வேறு கட்சிகள் அறிவித்துள்ள பொது வேலை நிறுத்தத்தைத் தொடர்ந்து, தமிழக -ஆந்திர எல்லைப்புற பகுதிகளான ஆரம்பாக்கம் மற்றும் ஊத்துக்கோட்டையில் தமிழக அரசுப் பேருந்துகள் நிறுத்தப்பட்டன.
    மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் ஆந்திராவுக்கு போதிய நிதி ஒதுக்காததை கண்டித்து ஆந்திரத்தில் இடதுசாரி கட்சிகள் மாநிலம் தழுவிய பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தன.
    இந்த வேலை நிறுத்தத்திற்கு தெலுங்கு நடிகர் பவன்கல்யான் தலைமையில் இயங்கும் ஜனசேனா கட்சி, ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.எஸ்.ஆர் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.இதையொட்டி ஆந்திராவில் அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. ஆந்திர அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை.
    இதனை தொடர்ந்து சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் கோயம்பேட்டில் இருந்து ஆந்திர மாநிலம் நெல்லூர், திருப்பதி, காளஹஸ்தி, நாயுடுபேட்டை, சூளூர்பேட்டை, ஸ்ரீஹரிகோட்டா போன்ற பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள் அனைத்தும் ஆரம்பாக்கம் வரையே இயங்கின.
    அதே போல பெரியபாளையம்-திருப்பதி நெடுஞ்சாலையில் தமிழக பகுதியான ஊத்துக்கோட்டையில் அரசுப் பேருந்துகள் நிறுத்தப்பட்டன.
    இதனால் ஆந்திராவிற்கு செல்லும் தமிழக பயணிகளும், ஆந்திராவில் தமிழகத்திற்கு வரவேண்டிய பயணிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
    மேலும் கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம், எளாவூர், மாதர்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஆந்திர மாநிலம் சூளுர்பேட்டையில் இருந்து வரும் காய்கறிகளும் வரவில்லை.
    அதே போல சென்னைக்கும், கும்மிடிப்பூண்டியை அடுத்த மாதர்பாக்கம், ஊத்துக்கோட்டை போன்ற பகுதிகளில் இயங்கி வந்த ஆந்திரப் பேருந்துகளும் இயங்கவில்லை, இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகினர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai