Enable Javscript for better performance
கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணி: பிப். 22-க்குள் விண்ணப்பிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணி: பிப். 22-க்குள் விண்ணப்பிக்கலாம்

    By DIN  |   Published on : 09th February 2018 12:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவள்ளூர் மாவட்ட த்தில் காலியாக உள்ள 34 கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியிடங்களுக்கு வரும் 22-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
    இதுகுறித்து வியாழக்கிழமை அந்த துறை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவள்ளுர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கு 34 காலியிடங்கள் உள்ளன. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 10-ஆம் வகுப்பு படித்திருப்பதோடு, கால்நடைகளை கையாளவும், மிதி வண்டி ஓட்டவும் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும்.
    இப்பணியிடங்களில் பெண்கள், ஆதரவற்ற விதவைகள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் இட ஒதுக்கீடு அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர். இப்பணிக்கு குறைந்தபட்ச வயது வரம்பு 1.7.2015 அன்றைய நாளில் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்கலாம்.
    இதற்கான விண்ணப்பங்களை இணையதளத்தில் இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். திருவள்ளுர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மேலும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, மண்டல இணை இயக்குநர், கால்நடை பராமரிப்புத் துறை, எண்.179, ஜவாஹர்லால் நேரு ரோடு, கால்நடை மருத்துவமனை வளாகம், திருவள்ளுர்-602 001 என்ற முகவரிக்கு முழு விவரங்களுடன் பிப்ரவரி 22-ஆம் தேதிக்குள் அஞ்சல் மூலமோ அல்லது நேரிலோ அளிக்கலாம்.
    இப்பணிக்கு நேர்காணல் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட இருப்பதாகவும் அந்த அலுவலகக் குறிப்பு தெரிவிக்கிறது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai