Enable Javscript for better performance
சாலையில் திரியும் கால்நடைகளால் விபத்து- Dinamani

சுடச்சுட

    

    கும்மிடிப்பூண்டி அருகே, சாலையில் திரியும் கால்நடைகளால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக வாகன ஓட்டுநர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
    கும்மிடிப்பூண்டியை அடுத்த பூவலம்பேடு-மாதர்பாக்கம்-சத்தியவேடு நெடுஞ்சாலையில் கனரக வாகனப் போக்குவரத்து 24 மணி நேரமும் நீடிக்கும். மேலும், பூவலம்பேடை அடுத்து சிப்காட் தொழிற்பேட்டை இருப்பதால் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் இந்தச் சாலையின் வழியாக வாகனங்களில் வேலைக்குச் செல்கின்றனர். இந்நிலையில், சாலையின் நடுவே எப்போதும் கால்நடைகள் சுற்றித் திரிவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்கு உள்ளாகின்றனர்.
    இதுபோன்ற முக்கிய சாலைகளில் கால்நடைகள் திரிவதைத் தடுக்க நெடுஞ்சாலைத் துறையினர் உரிய நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும். சாலைகளில் தங்கள் கால்நடைகளை திரிய விடும் உரிமையாளர்களைக் கண்டறிந்து அபராதம் விதிக்க வேண்டும் என வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai